பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி சார்பில்
"பயோ-காஸ்' தயாரிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் கூறியதாவது:
பொள்ளாச்சி
நகராட்சியில் மாட்டு சந்தை பகுதியில் அதிகளவிலான கழிவுகள் வெளியாகின்றன.
இதனை பயனுள்ள முறையில் மாற்ற திட்டமிடப்பட்டது. பொள்ளாச்சி சந்தைகளில்
வெளியாகும் குப்பைகள் அனைத்தும்
சேகரித்து "பயோ- காஸ்' தயாரிக்கப்
படும்.
இதிலிருந்து கிடைக்கும் திறனை, மின் சக்தி திறனாக மாற்றி தெரு விளக்குகள் எரிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இத்திட்டத்தின்
மூலம் குறைந்தது 300-400 தெரு விளக்குகள் எரியக்கூடும். இதற்காக நகராட்சி
நிர்வாக ஆணையத்திற்கு 90 லட்சம் ரூபாயுக்கான கருத்துரு அனுப்பப்
பட்டுள்ளது.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.