Advertisement
டெங்கு காய்ச்சல்: வீடுகள் தோறும் விழிப்புணர்வில் சுகாதாரத்துறையினர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2012
03:25

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் வீடுகள் தோறும் சுகாதாரத்துறையினர், ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தாக்குதல் அதிகளவில் உள்ளது. பொள் ளாச்சி நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாலும், சீதோஷண நிலை மாற்றத்தாலும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பலர் உரிய சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
நோய் தாக்குதலை கட்டுபடுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக,
இந்நோய் தாக்கியவர்களின் வீடுகளில் முழு சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஊராட்சி நிர்வாகத்துக்கும், பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகர் மற்றும் கிராமங்களில், டெங்கு, வைரஸ் காய்ச்சல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பல வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள் மூலம் கிராமங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில், தண்ணீர் தேங்கியுள்ளதா, சுகாதாரத்துடன் உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.
ஊரக பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுபடுத்தும் வகையில், குப்பை தேங்கவிடாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பருகும் நீரை நன்கு காய்ச்சி, வடிகட்டிய பின் குடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேங்கி இருக்கும் நீரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டும், கொசு உற்பத்தியை கட்டுபடுத்தும் வகையில், புகை மூட்டத்தை ஏற்படுத்தவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஊராட்சிகளை சேர்ந்த பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளிலும், முழு சுகாதாரத்தை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சுகாதார துறை மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம், சொக்கனூர் போன்ற ஆரம்ப சுகாதார மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்குட்பட்ட கிணத்துக்கடவு பேரூராட்சியில், பெரியார்நகர், அண்ணாநகர் பகுதிகளில் நான்கு பேருக்கும், பழனிக்கவுண்டன்புதூர், கோவிந்தகவுண்டன்புதூர், வடசித்தூர் போன்ற கிராமங்களில் ஆறு பேர் உட்பட பத்து பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் நோய்க்கு கோவை மாவட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
அங்கு டெங்கு காய்ச்சல் என்று உறுதிப்படுத்திய பின்பு, அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சம்பந்தபட்ட தனியார் மருத்துமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் சுற்றியுள்ள 50 வீடுகளுக்கு புகைமருந்து அடிக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது என்பதை பொதுமக்களுக்கு சுகாதாரதுறையினர் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
28-டிச-201201:58:15 IST Report Abuse
ganapathy மக்கள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துகொண்டால் கொசு தொல்லை இருக்காது. டெங்கு மலேரியா வராது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.