Advertisement
விதவையிடம் திருட்டு :சிக்கினார் மாடி ஆசாமி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்சி: வீட்டில் தனியாக இருந்த விதவையிடம், மூன்று பவுன் நெக்லஸை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி பெரியக்கடை வீதி சமஸ்பிரான் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஷகிலா பானு, 48. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்துல் காதர் இறந்துவிட்ட நிலையில், ஷகிலா பானு மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.ஷகிலா பானு குடியிருந்த வீட்டுமாடியில், மோகன்ராஜ், 29, என்பவர் குடும்பத்துடன் வசித்தார். கடந்த, 5ம் தேதியன்று, ஷகிலா பானு, தன் கழுத்தில் அணிந்திருந்த, மூன்று பவுன் தங்க நெக்லஸை பீரோவில் வைத்தார்.கடந்த, 8ம் தேதி, மாடியில் துணி காயப் போட சென்றார். மீண்டும் வீட்டுக்கு வந்துபார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, உள்ளே இருந்த நெக்லஸ் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஷகிலா பானு, கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.சிறப்பு எஸ்.ஐ., பழனிவேல் மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினர். அப்போது, மாடி வீட்டில் குடியிருந்த மோகன் ராஜ், ஷகிலா பானுவின், மூன்று பவுன் நெக்லஸை திருடி, அடகு வைத்து செலவு செய்தது தெரியவந்தது.அதையடுத்து, போலீஸார் மோகன்ராஜை கைது செய்து, மூன்று பவுன் நெக்லஸை மீட்டனர். போலீஸில் தற்போது சிக்கியுள்ள மோகன்ராஜ் மீது, ஏற்கனவே மாநகரப்பகுதியில், ஆறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.