துவரங்குறிச்சி: அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை, 1,286 பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ., சந்திரசேகர் வழங்கினார்.துவரங்குறிச்சி அருகேயுள்ள எம்.இடையபடி, பழையபாளையம், அக்கியம்பட்டி ஆகியவற்றில், அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா நடந்தது. விழாவில் மணப்பாறை எம்.எல்.ஏ., சந்திரசேகர் பங்கேற்று, எம்.இடையபட்டியில், 212 பேருக்கும், பழைய பாளையத்தில், 541 பேருக்கும், அக்கியம்பட்டியில், 533 பேருக்கும், மொத்தம், 1,286 பயனாளிகளுக்கு, அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை வழங்கி பேசினார்.மணப்பாறை தாசில்தார் குளத்தூர் பாண்டியன், மருங்காபுரி மண்டல துணை தாசில்தார் சகாயராஜ், மாவட்ட கவுன்சிலர் ராஜ்மோகன், மருங்காபுரி துணை சேர்மன் மலைச்சாமி, யூனியன் கவுன்சிலர்கள் மாணிக்கம், பொன்னுச்சாமி, மாணவரணி சுகுமார், துவரங்குறிச்சி நகர செயலாளர் கனி, பஞ்சாயத்து தலைவர்கள் கலா, சின்னையா, மூக்கையா, குழந்தைவேல், துவரங்குறிச்சி, ஆர்.ஐ., தனலெட்சுமி, வி.ஏ.ஓ.,க்கள் பர்குணன், உமையாண்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.