பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், விளாமுத்தூர் மற்றும் சிறுகன்பூர் கிராமங்களில், ஏழு நாட்கள் நடக்கும் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவக்க விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் குத்துவிளக்கேற்றி வைத்து முகாமை துவக்கி வைத்தார்.இதில் நொச்சியம் பஞ்சாயத்து தலைவர் சங்கர், சிறுகன்பூர் பஞ்சாயத்து தலைவர் கருப்பையா உட்பட பலர் பேசினர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் வசந்தம் தலைமையிலான விரிவுரையாளர்கள் செய்திருந்தனர். இதில் விரிவுரையாளர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார். முடிவில் என்.எஸ்.எஸ்., அலுவலர் கலா நன்றி கூறினார்.
முகாமில் விஸ் செயல்பாடுகள், நுகர்வோர் ப õதுகாப்பு, பொது சுகாதாரம், நவீன விவசாய தொழில்நுட்பங்கள், குடிநீர் பயன்பாடு, சிறுசேமிப்பு, எய்ட்ஸ் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை வளங்களை பாரமரித்தல், யோகா பயிற்சி போன்ற பணிகளில், என்.எஸ்.எஸ்., மாணவிகள் ஈடுபடவுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.