புதுக்கோட்டை: நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கை உடனடியாக நடத்தக்கோரி, 200 இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பகுதிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் பல்வேறு காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும், 25 ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இதுபோன்று பணியிட மாறுதலை எதிர்பார்த்து காத்திருந்த, 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கவுன்சலிங்கை உடனடியாக நடத்தி, ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கவேண்டும் எனக்கோரி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கருப்பையா தலைமையில், 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காலை, 10 மணிக்கு துவங்கிய முற்றுகை போராட்டம் மாலை, 6 மணி வரை நீடித்தது.இந்நிலையில் வரும், 31ம் தேதிக்குள் கவுன்சலிங் நடத்தப்படும் என்று கலெக்டர் மனோகரன் உறுதி அளித்ததன் பேரில், முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.