ஓசூர்: ஓசூர் கோனேரிப்பள்ளி பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில், சூளகிரி அடுத்த சப்படி அரசு நடுநிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.கல்லூரி செயலாளர் குமார் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., கல்லூரி முதல்வர் சுதாகரன் முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.சமூக சேவை துறை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், திட்ட இயக்குனர் சேதுராமன் ஆகியோர் பேசினர். தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ அலுவலர் கமலேசன் கலந்து கொண்டு பேசினார்.அரசு மருத்துவமனை டாக்டர்கள் முழு உடல்பரிசோதனை செய்தனர். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர் அரிச்சந்திரன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.