ஊத்தங்கரையில்: ஊத்தங்கரையில், ஜாதி மத வேறுபாடுகளை களையும் நோக்கில், கிறிஸ்துமஸ் விழா நடந்தது.எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் மற்றும் வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஊர்வலமாக கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஆர். சி., சர்ச்சுக்கு சென்று அங்கிருந்த கிறிஸ்துவர்களுக்கு கேக் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.கிறிஸ்துவர்கள் சார்பில் ஹிந்து மற்றும் முஸ்லிம்களுக்கு சர்ச் வாசலில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், ஊத்தங்கரை யூனியன் சேர்மேன் கிருஷ்ணன், துணை சேர்மேன் சுப்பிரமணி, டி.எஸ்.பி., கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், அ.தி.மு.க., தொழிற்சங்க தலைவர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, தி.மு.க., ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், பாரதிய ஜனதாவை சேர்ந்த ஜெயராமன், ஹிந்து முன்னணி ஆஞ்சநேய குப்தா மற்றும் முனீர்பாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.