தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், போதிய பருவமழை இல்லாததால், நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களில் நெல், ஒன்றாகும். கடந்தாண்டு, மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோடு தாலுகாவில், ஐந்து ஆயிரத்து, 935 ஹெக்டேரும், அரூர் தாலுகாவில், ஐந்து ஆயிரத்து, 170 ஹெக்டேர், பாப்பிரெட்டிப்பட்டியில், முன்று ஆயிரத்து, 362 ஹெக்டேர், தர்மபுரியில், இரண்டு ஆயிரத்து 843 ஹெக்டேர், பென்னாகரத்தில், 119 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டது.இந்தாண்டு,ஏப்ரல் மாதத்தில் முதற்கட்டமாக , ஆயிரத்து, 500 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்டது. மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால், விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பி மாவட்டம் முழுவதும், கடந்த, செப்டம்பர் மாதம், 12 ஆயிரம் ஹெக்டேரில் மட்டும் நெல் நடவு செய்தனர்.அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டியில் ஓரளவு பருவமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள வாணியாறு, வரட்டாறு அணைகளில் நீர் மட்டம் உயர்ந்திருந்தது. விசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இரு அணைகளில், இருந்து பாசனத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது.பிற பகுதிகளில் விவசாயிகள் நிலத்தடி நீரின் மூலம் சாகுபடி செய்த நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். தற்போது, நெல் அறுவடை சீசன் துவங்கிய நிலையில்,மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.பருவ மழை பொய்த்ததால், இந்தாண்டு தர்மபுரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பரபரப்பளவு குறைந்துள்ளதாக விசாயிகள் தெரிவித்தனர். சந்தையில் கடந்த சில தினங்களாக உயர்ந்து வரும் அரிசி விலை தங்களுக்கு ஆறுதலாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.