கோபிசெட்டிபாளையம்ஐயப்பன் கோவில் சீஸனால், வாழைப்பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் சென்ற ஆண்டை விட, நடப்பாண்டு வாழைப்பழத்தின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.கோபி சுற்று வட்டாரத்தில் கோபி, புளியம்பட்டி, குருமந்தூர், மூணாம்பள்ளி, ஆயிபாளையம், மோளபாளையம், அக்கரைகொடிவேரி, புஞ்சை புளியம்பட்டி, பங்களாபுதூர் சுற்று வட்டாரத்தில், 25 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.அறுவடை செய்யப்படும் வாழைத்தார் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் வாழைத்தார் சீஸன் இல்லாத நேரத்தில் சராசரியாக, 15 ஆயிரம் வாழை தார் வரத்தானது. நடப்பாண்டு சீஸன் நேரத்திலும், 8,000 வாழைத்தார் மட்டுமே வரத்தாகிறது. ஐயப்பன் கோவில் சீஸன், மார்கழி என்பதாலும் வாழைப்பழம் தேவை அதிகரித்துள்ளதால், வாழைத்தாரின் விலை ஏறுமுகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கதளி ஒரு கிலோ, 31 ரூபாய்க்கும், நேந்திரம், 23க்கும், ரஸ்தாளி ஒரு தார், 400 ரூபாய், தேன்வாழை, 425 ரூபாய், ரொபஸ்டா, 370 ரூபாய், மொந்தன், 250 ரூபாய், பூவன், 275 ரூபாய், பச்சைநாடன், 220 ரூபாய், செவ்வாழை, 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வாழை விவசாயிகள் கூறியதாவது: ஐயப்பன் கோவில் சீஸன் நேரத்தில் கேரளாவில் நேந்திரம் சிப்ஸ் விற்பனை அமோக இருக்கும். கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் ஏராளமானோர் விற்பனை சங்கத்தில் வாழைத்தார் வாங்கி செல்வர். கடந்த ஆண்டில் ஐயப்பன் கோவில் சீஸன் நேரத்தில், முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக கேரளா வியாபாரிகள் வராததால், நேந்திரம் விற்பனை சரிந்தது.நடப்பாண்டு நேந்திரம் வாழை விற்பனையும், வாழையின் தேவை அதிகரித்ததாலும், நடப்பாண்டு நேந்திரம், கதளியின் விலை இரு மடங்கானது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கதளி ஒரு கிலோ, 15.60 ரூபாய், நேந்திரம், 16. 50 ரூபாய், ரஸ்தாளி ஒரு தார், 410 ரூபாய், தேன்வாழை, 280 ரூபாய், ரொபஸ்டா, 250 ரூபாய், மொந்தன், 220 ரூபாய், பூவன், 270 ரூபாய், பச்சைநாடன், 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நடப்பாண்டு கதளி ஒரு கிலோ, 31 ரூபாய், நேந்திரம், 23 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டு பருவமழை தவறியதால் வாழை உற்பத்தி, 50 சதவீதம் குறைந்ததால், வரத்தும் குறைந்தது. வாழை தேவை அதிகரித்துள்ளதால், வாழையின் விலை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.