ஈரோடுஈரோட்டில், 2013, ஜனவரி, 12 முதல், 2014, ஜனவரி, 12 வரை, விவேகானந்தர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக, விவேகானந்தர் கேந்திரம் ஈரோடு மாவட்ட கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.சுவாமி விவேகானந்தரின், 150வது ஜெயந்தி விழாவை, 2013, ஜனவரி, 12ம் தேதி முதல், 2014, ஜனவரி, 12ம் தேதிவரை, கொண்டாட விவேகானந்தர் கேந்திரம் முடிவு செய்துள்ளது. ஒரு வருட காலத்துக்குஅவரது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த, சங்கல்பம் ஏற்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது.கேந்திர உறுப்பினர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விவேகானந்தர் கேந்திரம் ஈரோடு மாவட்ட கிளை சார்பில், சங்கல்ப நிகழ்ச்சி நடந்தது.நகர அமைப்பாளர் மகேஷ்குமார் கூறுகையில், ""அடுத்த ஆண்டு, 2013, ஜனவரி, 12ம் தேதி அனைத்து வார்டு, பஞ்சாயத்து பகுதியில், சுவாமி விவேகானந்தர் உருவ படத்துக்கு, புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. வார்டு வாரியாக கேந்திரத்துக்கு, புதிய குழுவினரை நியமித்து மாதம் ஒருமுறை சந்திக்கவும், செப்டம்பர், 11ல் அனைத்து அரசு அலுவலகங்களிலும், விவேகானந்தர் படம் வைக்கவும், 2014, ஜனவரி 12ம் தேதி வரை, விவேகானந்தர் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.