வேலூர்: அரசு நிதியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை, டவுன் பஞ்சாயத்திடம் ஒப்படைக்க, முன்னாள், தி.மு.க.,- எம்.எல்.ஏ., மறுத்ததால், போலீஸார் மண்டபத்துக்கு பூட்டு போட்டனர்.
வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி தொகுதி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,சூரியகுமார். தொகுதி மேம்பாட்டு நிதி, 2. 50 லட்சம் மற்றும் நமக்கு நாமே திட்ட நிதி, 12 லட்ச ரூபாய் சேர்த்து, 14 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், அங்குள்ள முருகன் கோவிலில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக திருமண மண்டபம் கட்டினார்.திருமண மண்டப நிர்வாகத்தை சூரியகுமார் பார்த்து வந்தார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், திருமண மண்டபத்தை நாட்றாம்பள்ளி டவுன் பஞ்சாயத்திடம் ஒப்படைக்க சூரியகுமார் மறுத்து விட்டார்.திருமண மண்டபத்தின் வரவு, செலவு கணக்குகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் இருந்து வந்தார். இந்த திருமண மண்டபத்தின் தற்போதைய மதிப்பு, ஐந்து கோடி ரூபாயாகும். திருமண மண்டபத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொள்ள சூரிய குமார் முயற்சி செய்ததாக தெரிந்தது.பொது மக்கள் கொடுத்த புகார் படி, நாட்றம்பள்ளி போலீஸார், சூரியகுமாரிடம் சென்று மண்டபத்தை ஒப்படைக்கும்படி கேட்டனர். அவர் மறுத்ததால், நேற்று மண்டபத்தில் உள்ளவர்களை வெளியேற்றி, மண்டபத்துக்கு பூட்டு போட்டனர். இதை தடுந்த சூரியகுமார், அவரது ஆட்களை போலீஸார் வெளியேற்றினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.