புதுடில்லி: டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., திடீர் வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் தமக்கு 10 நிமிடமே பேச நேரம் தரப்பட்டது என்றும் இது போதாது என்றும் குறைபட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதனால் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சில நிமிடம் பரபரப்பானது.
அவர் மேலும் கூட்ட அரங்கின் வெளியே நிருபர்களிடம் பேசுகையில்:
குரல்வளையை நெறிப்பது ஏன்?
எதிர்ப்பு மாநில முதல்வர்கள் பேசப்படுவதற்கு வழங்கப்படும் நேரம் மிக குறைவு. இவ்வாறு குரல்வளையை நெறித்து, கேவலப்படுத்துவது ஏன்? இதற்கு எங்களை அழைக்காமல் இருக்க வேண்டியது தானே? எங்களை இந்த அளவு குறைந்த நேரம் கொடுக்கப்படுவது அர்த்தமற்றது, நான் என்னவெல்லாம் பேச வேண்டும் என் நினைத்திருந்தேனோ அதனை பேசி முடிப்பதற்குள், அதவாது 3 ல் ஒரு பங்கு தான் பேசினேன். மணி அடித்து நிறுத்தச்சொல்லி கேவலப்படுத்தி விட்டார்கள். மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் 30 முதல் 35 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துக்கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். பல மாநாடுகளில் பேசியிருக்கிறேன். இது போன்று நடந்ததில்லை. குறிப்பாக 10 நிமிடத்தில் தமிழகத்தின் தேவையை எடுத்து வைக்க முடியாது, இது பயனற்றது. தெரிவித்தார். நான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளேன். இவ்வாறு ஜெ., கூறினார்.
‘ தமிழில் பேசுங்களேன் ’- நிருபர்கள்;
பெண்கள் பாதுகாப்பு:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மனம் போன போக்கில் கருத்து சொல்லும் கழக கண்மணிகளே,ஜெ.கேபிள் டி.வி.பற்றி பேச ஆரம்பித்ததும் மணி ஒலித்த மர்மத்தை சொல்வீர்களா....................ஏன் அருமை தமிழக சொம்புகளே,உங்களால் தமிழகத்தில் செய்ய முடியாததை டெல்லியில் இத்தாலி ராணி மக்கு மோகனை வைத்து செய்ததில் உங்கள் சந்தோசம்., தமிழக மக்களின் கோபமாக மாறி ஓட்டு சீட்டில் காட்டும்போது நீங்கள் ஓடி ஒளியத்தான் போகிறீர்கள்.....................
தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட அவமானம் ...தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமானம் ......இந்தியாவில் 28மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் இன்று டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில்கூட்டத்தில் ஒரு மாநில முதல்வருக்கு 10 நிமிடமே பேச நேரம் தரப்பட்டது ...10 நிமிடத்தில் ஒரு மாநிலத்தின் பிரச்சினைகளை பேசுவது சாத்தியமில்லாதது....ஆதாரங்கள் மற்றும் புள்ளி விவரங்கள்
இல்லாமல் இங்கு பேச முடியாது..மாநிலத்தின் குறைகளை கேட்க வேண்டுமே தவிர..
நேரம் கொடுத்து 10 நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்று மணி அடிப்பது ஒரு மாநிலத்திற்கு பெரிய அவமானம்..மத்திய அரசின் இந்த செயல் மிகவும் மோசமானது .மத்திய அரசு ஒரு மாநிலத்தை வஞ்சித்து கொண்டு வருவதை இது வெளிபடையாக உணர்த்துகிறது ....குறைந்த பட்சம் முதலிலே எவ்வளவு நேரம் பேசப்போகிறார்கள் என்பதை கேட்டு அதற்கு ஏற்ப பேசஅனுமதித்திருக்கலாம். மணி அடித்து நிறுத்த சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது.
கண்டனத்துக்குரியது..ஒரு மாநில முதல்வர் பேசினால் அந்த மாநில மக்கள் மொத்தமும் பேசுவதாகத்தான் அர்த்தம், ஒரு முதல்வர் பேசும்போது மணி அடித்து அமரசெய்வது என்பது பெருத்த அவமானம்...மக்களை வஞ்சித்து கொண்டு இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் அதை தூக்கி நிறுத்தி கொண்டு இருக்கும் திமுக விற்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ...
our tn cm has been insulted not admk cheif. think that this is an insult to t.nadu. congress council meeting is held three r four days yearly. when the number of states are more and problems are also more the central govt should conduct meeting like these for two or three days. if that is so the speeches of cm are given in written and not to speak briefly then why they are calling all state cm to meet better do video confrerence and tell them to fax the needed and problems list.
10 நிமிட நேரத்தில் என்ன விஷயத்தை வெளியிட முடியும். முதல்வர்கள் டெல்லி போவதற்கு 10 மணி நேரம் ஆகும். 10 நாட்கள் இரவு பகலாக உட்கார்ந்து புள்ளி விபரங்கள் தயார் செய்ய வேண்டும். வெறும் 10 நிமிடத்தில் உங்கள் பேச்சை முடித்துகொள்ளுங்கள் என்றால் " மாண்பு மிகு தலைவர் அவர்களே என்று கூறிவிட்டு உட்கார வேண்டியதுதான். இதற்கு எதற்கு முதலமைச்சர்கள் கூடும் தேசிய அபிவிருத்தி கூட்டம். 35 முதல்வர்கள் பேசுவதற்கு தலா 10 நிமிடமாம். குட்டி யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவைகளுக்கும் 10 நிமிடம் பெரிய மாநிலங்களான தமிழ் நாடு போன்றவைகளுக்கும் அதே 10 நிமிடமா? என்ன நியாயம். பழைய ராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் ஐ நா சபையில் 15 மணி நேரம் தொடர்ந்து பேசியிருக்கிறார். 10 நிமிட நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்க் வாழ்க மற்றும் மந்த்ரிகள் வாழ்க என்று சொல்லி அமர வேண்டியதுதான்.
தன்னுடைய சொந்த விசயமாக சென்று இப்படி ஒரு சம்பவம் நடந்தால்.... அம்மையார் அவர்கள் கோபப்பட்டதில் அர்த்தம் இருக்கிறது... ஆறரை கோடி தமிழனுடைய தலைமை பொறுப்பில் இருப்பவர் ... 10 நிமிடம் என்பது தங்களுக்கு அழைப்பு அனுப்பியபோதே கூறி இருப்பார்களே.... 10 நிமிட uraiei தயார் செய்ததை பேசிவிட்டு மணி அடித்ததும்....மீதம் நான் பேசவேண்டியதை.... இந்த கோப்பில் பதிவே செய்துள்ளேன் என்று கூறி வெளிநடப்பு செய்து இருந்தீர்கள் என்றால்..... thalai நகர் என்ன ஒட்டுமொத்த இந்தியா உங்கள் Pakkam...இருந்திருக்கும்.... தமிழனுடைய நலம் பார்க்கவில்லை நீங்கள்.... ஏற்கனவே திட்டமிட்டு அரங்க்கேற்றப்பட்டவையாக என்பார்வைக்கு தெரிகிறது.... இடிப்பார illaa மன்னன் வாழுவே கேடுப்பரினும் கெடும்....அய்யன் வள்ளுவன் சொன்னது.......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.