Pranab's son calls anti-rape protesters 'dented-painted', withdraws words | வர்ணம் பூசிய மாணவிகள்பேராட்டக்காரர்கள் அல்ல ;ஜனாதிபதி மகன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது| Dinamalar

வர்ணம் பூசிய மாணவிகள்பேராட்டக்காரர்கள் அல்ல ;ஜனாதிபதி மகன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஜனாதிபதி மகன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது

கோல்கட்டா: மாணவி கற்பழிப்பு தொடர்பாக டில்லி மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து ஜனாதிபதி மகன் கூறிய விமர்சனத்திற்கு கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. சமீபத்திய போராட்டம் குறித்து ஜனாதிபதி பிரணாப் மகன் அபிஜித் முகர்ஜி ஒரு கூட்டத்தில் பேசுகையில்; மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இவர்கள் வர்ணம் பூசிக்கொண்டும், பல்லை காட்டி கொண்டும் , மிக அழகாக போராட வருகின்றனர். டிஸ்கோத்தேவுக்கு போய் விட்டு இந்தியா கேட்டுக்கு வருகின்றனர். டி .வி.,க்களில் பேட்டி அளிப்பவர்கள் சிலர் கைக்குழந்தையுடன் வருகின்றனர். இவர்கள் மாணவிகள் தானா என்று எனக்கு சந்தேகம் வருகிறது. டில்லி சம்பவம் போல் எகிப்தில் ஏராளமாக நடக்கிறது;இந்த போராட்டத்தில் மாணவ, மாணவிகள் தவிர ஏனையோரும் போராட வந்தனர். இது ஏன் ? அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது அவர்களுக்கு ஒரு பேஷனாகி போனது என்றார்.இவரது பேச்சுக்கு மாணவ, மாணவிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் இவரது பேச்சில் எவ்வித தவறும் இல்லை. இதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்பது தேவையற்றது என கூறப்பட்டுள்ளது.


திரும்ப பெறுகிறேன்: நான் பேசியது யாருக்கும் வேதனை அளிக்குமாயின் வர்ணம் பூசிய என்ற எனது கருத்தை திரும்ப பெறுகிறேன். வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sincere Sigamani - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-டிச-201210:46:08 IST Report Abuse
Sincere Sigamani நடந்தது பெரிய தவறு. அதை தொடர்ந்து நடப்பது மீண்டும் மீண்டும் தவறு. ஒரு பெண்ணை மதிக்க தெரியாதவன் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. அது கற்பழிப்பாக இருந்தாலும் சரி அல்ல ஒரு character assasination இருந்தாலும்..
Rate this:
Share this comment
Cancel
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
28-டிச-201205:50:40 IST Report Abuse
vaaimai 'யாகாவாராயினும் நாகாக்க'. பகுத்தறிவுள்ளவன் யோசித்து ஆராய்ந்து பிறகு தான் பேசுவான்.
Rate this:
Share this comment
Cancel
28-டிச-201200:04:43 IST Report Abuse
Pazhaniyappan Muthukkaruppan நமது நாட்டின் குடியரசு தலைவர் யார்?
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
27-டிச-201219:28:58 IST Report Abuse
Krish அப்பா ஒரு முன் கோபி....இருந்தாலும் விதி வசத்தால் ஜனாதிபதி... நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியில் ஆரம்பித்த இந்த விஷ பரிட்சை,அதாவது பெரிதாக தகுதிகள் இல்லாவிட்டாலும் தமது வாரிசுகளையும் அரசியலில் இழுத்து அவர்களை பதவியில் வுட்கார வைத்து அழகு பார்க்கும் விஷ பரிட்சையை இன்றைக்கு காங்கிரஸ் மட்டும் இன்றி அணைத்து கட்சிகளிலும் அதனதன் தலைவர் அவரவர் பதவிக்கு ஏற்றபடி வாரிசு அரசியலை வுரிமயாகவே கருதி செய்லபடுதுகின்றனர்.இன்று காங்கிரஸ் கட்சியில் வுள்ள அணைத்து மத்திய அமைச்சர்களின் வாரிசுகளும் MLA அல்லது MP தான்..அந்த வகையில் தகுதி இல்லாத வாரிசுகளை கூட எம்பியக்கி பின் மத்திய மந்திரியாக்கும் காங்கிரஸ் தலைவர்களின் கலாச்சாரத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகெர்ஜி மட்டும் விதி விளக்கா என்ன....தலைவி,தலைவன் எவ்வ்வழியோ ,இரண்டாம் கட்ட தலைவனும் அவ்வழியே..
Rate this:
Share this comment
Cancel
Subramaniya Bharathi - Geneva,சுவிட்சர்லாந்து
27-டிச-201219:17:23 IST Report Abuse
Subramaniya Bharathi ஆட்சி கையில் இருந்தால் என்னவேண்டுமானாலும் சொல்லலாமா.. முதலில் மத்தியில் உள்ள ஆட்சியை ஒழிக வேண்டும்.. முதலில் இவன் யார் விமர்சனம் செய்ய ... ?
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
27-டிச-201219:08:54 IST Report Abuse
LAX எந்த சொல்லை வாபஸ் பெறவேண்டும் என்பதுகூட இவனுக்குத் தெரியவில்லை. மேலும் காங்கிரஸ்-க்கு இப்போது 'உல்டா - புல்டா' வியாதி போல யார் என்ன தீங்கு செய்தாலும், ஊழல் செய்தாலும் திருடினாலும் கொலை செய்தாலும், கொள்ளையடித்தாலும், மற்றவர்களை தவறாக விமர்சித்தாலும் அதிலேதும் தவறில்லை என்றே கூறி வருகிறது, செய்தியும் வெளியிடுகிறது.
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
28-டிச-201200:24:10 IST Report Abuse
Karam chand Gandhi இவன் என்பது சரியான வார்த்தையில்லை....
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
27-டிச-201218:30:10 IST Report Abuse
Snake Babu முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி கொள்ள வேண்டும், ஒரு கூட்டம் போராட்டம் செய்கிறது, அதை ஒரு கூட்டம் கேலி செய்கிறது. இதுக்கு நாம் கருத்து எழுதுகிறோம், சரியோ தவறோ கருத்து என்று ஒன்று போடுகிறோம், இந்த இடம் கருத்துகளை பரிமாரிகொள்ளவே அன்றி தனி நபர் விமசனதிர்க்கு அல்ல. " அது என்ன உன் சகோதரிக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் இப்படி பேசுவாயா ???... " ....................... ஒன்று மட்டும் தெளிவானது, போராட்டம் செய்வோரும், அதை கேலி செய்தோரும், இங்கே கருத்து எழுதுவோரும் அவரவர் சொந்த்தங்களை நன்றாக பாதுகாக்கிறார்கள். மற்றதெல்லாம் மீடியா வெளிச்சதிர்க்காவே. சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதே. அதை பயன்படுத்த படும் விதம் கவனிக்க வேண்டியது. இரவு டடிங்க்லே தனியாக செல்வது என்பது என் சகோதரியாக இருந்தால் கண்டப்பாக கண்டிப்பேன், இதுதான் செய்ய வேண்டியது, இதை வருமுன் காப்பது என்று கூறுவார்கள், இதற்கு பேர் ஆணாதிக்கம் அல்ல. சென்னை இரவில் பெண்கள் ரோட்டில் புகை பிடிப்பது, தண்ணி அடிப்பது (வேறு உலகத்தை பற்றி பேசவில்லை) என்பது கண்டிக்க பட வேண்டியது. டிஸ்கோ, ப்பு, மற்றும் பல எல்லா ஊர்களிலும் நல்ல பிரபலம், என்னுடை சொந்தங்கள் என்றால் போகவேண்டாம் என்று தான் சொல்வேன். இதற்கு பேர் ஆணாதிக்கம் அல்ல, அக்கறை, சரி... பலாத்கார வன்முறைக்கு தீர்வாக குடியை பற்றி கூறினால் அதுக்கும் எதிர்ப்பு "உன் சகோதரிக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் இப்படி பேசுவாயா ???... " இப்படி கருத்து போட்டி போட வேண்டுமானால் நல்லா இருக்கும், தீர்வுக்கு உதவாது. woman is weeker sex , பலகினாமனதிர்க்கு சக்தி ஊட்டவே இந்த கட்டுப்பாடு. இது ஆணாதிக்கம் அல்ல. ஆணாதிக்கம் என்பது பெண்கள் வளர்ச்சியில் தடை போடுவது, நம் நாட்டில் அது நன்றாகவே வேருன்றி இருக்கிறது. அது இந்த பிரச்சனைக்கு சம்மந்தம் இல்லை. இன்னும் கேட்டால் பெண்கள் அதிகமாகவே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். குடி ஒழிய வேண்டும், தனி மனித ஒழுக்கம் பெருக வேண்டும், தன்னை போலவே மற்றவர்களையும் நேசித்தால் நாட்டில் குற்றம் குறையும். நன்றி.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_tag.asp, line 340