சென்னை : இணையதளம் மூலமாக, புதிய ஆவின் பால் அட்டைகள் விண்ணப்பிக்கும் திட்டம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து
ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை இணையதள
விண்ணப்பங்களில், 600 புதிய பால் அட்டைகளுக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு புதிய அட்டைக்கான பதிவு எண், மின்னஞ்சல்
மூலம் அனுப்பப்படும். இந்த பதிவு ரசீதை படிநகல் எடுத்து, அருகில் உள்ள
ஆவின் அலுவலகத்திற்கு சென்று, அங்கு ஆவின் அட்டைகளை பெற்று கொள்ளலாம். அதன்
பின்னர், இணையதளத்திலேயே மாத வாடகை செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.