சென்னை : யானைகவுனியில், நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்த பார்வை குறைபாடுள்ள மூதாட்டி பலியானார்.யானைகவுனி, கல்யாணபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சின்னப்பொண்ணு, 80. இவரது கணவர் ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார். பேரன் சீனிவாசனுடன் தங்கியுள்ள, சின்னப்பொண்ணுவுக்கு பார்வை சரிவர தெரியாது.நேற்று காலை, குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து கீழே இறங்கி வர முயன்ற சின்னப்பொண்ணு தவறி, கீழே விழுந்து விட்டார். பலத்த காயமடைந்த சின்னப்பொண்ணுவை, அவரது பேரன் சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து யானைகவுனி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.