அண்ணாநகர்
: கீழ்ப்பாக்கத்தில், தனியார் "கால் டாக்சி' மரத்தில் மோதியதில்,
ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அயனாவரம், வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர்
வடிவேலன், 32. ஓட்டுனரான, இவர் தனக்கு சொந்தமான "டாடா இண்டிகா' காரினை
(டி.என்.,22- பிஏ 8737), தனியார் "கால் டாக்சி' நிறுவனத்திற்காக ஓட்டி
வந்தார்.
இந்நிலையில், வடிவேலன் நேற்று முன் தினம் இரவு முழுவதும்
பணிபுரிந்து விட்டு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, காரில் வீடு திரும்பி
கொண்டிருந்தார்.
அப்போது, அவர் கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை
அருகே, புதிய ஆவடி சாலையில் சென்ற போது, கவன குறைவால், கார் சாலையின்
ஓரத்திலுள்ள நடைமேடையில் ஏறி, அங்கிருந்த மரம் மீது மோதி நின்றது.இதில்,
படுகாயமடைந்த வடிவேலன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, அண்ணாநகர்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.