Advertisement
டீசல் ஒதுக்கீடு இல்லாததால் நடமாடும் நீதிமன்றம் முடக்கம் : முகாமிடுவதில் சிக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2012
21:28

காஞ்சிபுரம் : மாவட்டத்தில் இயங்கும் நடமாடும் நீதிமன்ற வாகனத்திற்கு, டீசல் ஒதுக்கீடு செய்யப்படாததால், வாகனம் காஞ்சிபுரம் நகருக்கு உள்ளேயே முடங்கி உள்ளது.சிறிய வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து அபராதம் விதிக்க, கடந்த அக்டோபர் மாதம், காஞ்சிபுரம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி உட்பட, 10 மாவட்டங்களில், நடமாடும் நீதிமன்றத்திற்கு வாகனங்கள் வழங்கப்பட்டன.துவக்கம்காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 5ம் தேதி, முறைப்படி நடமாடும் நீதிமன்றம் துவக்கப்பட்டது. இதில், ஒரு நீதிபதி, ஒரு தட்டச்சர், ஒரு உதவியாளர், ஒரு ஓட்டுனர், ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறுவோர், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், காப்பீடு செய்யாதோர், குடி போதையில் வாகனங்களை ஓட்டுவோர், ஹெல்மெட் அணியாதவர்கள் என, மோட்டார் வாகன வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, நடமாடும் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் மட்டும், இரண்டு மாதங்களில், 500க்கும் மேற்பட்ட வழக்குகள் முடிக்கப்பட்டு, 6 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.முடக்கம்இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், ஆகிய இடங்களில் நடமாடும் நீதிமன்றம் முகாமிடும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நடமாடும் நீதிமன்ற வாகனம் துவக்கப்பட்டதிலிருந்து, காஞ்சிபுரத்தை தவிர வேறு எந்த ஊருக்கும் செல்லவில்லை. இதற்கு, டீசல் பிரச்னையே காரணமாக கூறப்படுகிறது.
நடமாடும் நீதிமன்ற வாகனத்திற்கு, இதுவரை டீசல் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் வாகனத்தை காஞ்சிபுரம் தவிர, வேறு எங்கும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலே நிறுத்தப்படுகிறது. காவல் துறையினர் போக்குவரத்து விதிகளை மீறுவோரை, அங்கு அழைத்து வந்து, விசாரணைக்கு உட்படுத்தி, அபராதம் விதித்து வருகின்றனர்.ஒதுக்கீடு வரவில்லை இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது: நடமாடும் நீதிமன்ற வாகனத்திற்கு, உயர்நீதி மன்றப் பதிவாளர் டீசல் ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டும். உத்தரவு வந்த பிறகு, வாகனத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் அலுவலக வளாகத்திலேயே, டீசல் நிரப்பிக் கொள்ள முடியும்.ஆனால், ஒதுக்கீடு உத்தரவு வராததால், வாகனத்தை வெளியில் கொண்டு செல்ல முடியவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலேயே நிறுத்தி வைக்கின்றனர். டீசல் ஒதுக்கீடு செய்தால், பிற ஊர்களுக்கு வாகனம் செல்ல முடியும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு காவல் துறையினர் கூறினர்.மாவட்டத்தில் மோட்டார் சம்பந்தமான விதிமுறை மீறல்கள் அதிகம் நடந்து வரும் நிலையில், நடமாடும் நீதிமன்றத்தை மற்ற இடங்களுக்கும் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்களும், காவல் துறையினரும் எதிர்பார்க்கின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.