Advertisement
தமிழக பா.ஜ., புதிய தலைவர் யார்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012,22:31 IST

சென்னை: தமிழக பா.ஜ.,வின் புதிய தலைவர், இன்று தேர்தல் மூலம் தேர்வு செ#யப்படுகிறார். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், பா.ஜ.,வின் உட்கட்சி தேர்தல், கடந்த, இரு மாதங்களாக நடந்து வருகிறது. கிளை, ஒன்றியம், நகரம், மாவட்டம் ஆகியவற்றுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளன. இறுதியாக, மாநில தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது. இதோடு, தேசிய குழுவுக்கு, தமிழகத்திலிருந்து, 39 பேர் தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடக்கிறது. மாநிலத் தலைவராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என, தெரிகிறது. போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படலாம் என்றும், பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சியின் ஒரு பதவியில் ஒருவர், மூன்றாண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதியை சமீபத்தில் திருத்தியுள்ளனர். இதன்மூலம், ஒருவர் ஒரு பதவியில், ஆறு ஆண்டுகள் தொடர முடியும். இதன்மூலம், பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வாவது உறுதி என்றும் கூறுகின்றனர். தேசிய குழுவுக்கும், போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் என, தெரிவிக்கின்றனர். கட்சியின் மாநில துணைத் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் நியமன அடிப்படையில் நடப்பதால், தலைவர் தேர்தலுக்குப் பிறகு, மாநில நிர்வாகிகள் நியமனம் நடக்கும் என்றும், பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
Pannadai Pandian - wuxi,சீனா
28-டிச-201218:30:53 IST Report Abuse
Pannadai Pandian பிஜேபிக்கு கால் இருக்கா தமிழ் நாட்டுல ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
28-டிச-201213:28:57 IST Report Abuse
Pannadai Pandian என்னுடைய கல்லூரி நண்பர் திரு.ஜெகவீரபாண்டியன் exMLA என்ன ஆனார் என்று தெரியவில்லை. மாயவரத்தில் சிறிது பிஜேபியை வளர்த்தார். பின் கலைஞருக்கு காவடி தூக்கியதால் வடிவேலு ஆனார் என்று எண்ணுகிறேன். இவரது கூட்டத்தில் இருந்த ஒரு வக்கீல் தான் தற்போது தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
28-டிச-201210:25:14 IST Report Abuse
பட்டிகாட்டான்   புதிய பாட்டிலில் பழைய கள் ... வேறென்ன சொல்ல ....
Rate this:
3 members
0 members
0 members
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
28-டிச-201210:05:23 IST Report Abuse
Sundeli Siththar எங்கள் காலெனியின் தலைவருக்குக் கூட கொஞ்சம் வேலை இருக்கும்...
Rate this:
3 members
0 members
3 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
28-டிச-201209:15:14 IST Report Abuse
Pugal எமது இன விவசாயிகளுக்குத் தண்ணீர் தர மறுக்கும் ஒரு கட்சிக்கு எமது மாநிலத்தில் யார் தலைவரானால் என்ன? இந்தக் கட்சி நம் மாநிலத்தில் காலூன்றிவிட்டது என்றால் அது நமக்கு பெருத்த அவமானம் தான்.
Rate this:
7 members
0 members
7 members
Share this comment
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
28-டிச-201208:15:20 IST Report Abuse
Krishnamoorthy Srinivasa Rao பொன் ராத போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும்....பிஜேபி யை தமிழகத்தில் காலூன்ற செய்தவர் அவர்.
Rate this:
6 members
0 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.