"சுழற்சி முறையில் ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்படும்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""ரேஷன் கடைகளில், உள் தாள் ஒட்டும் பணியில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, சுழற்சி முறையில், குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படும்,'' என, அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் காமராஜ், உணவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: பொங்கலுக்கு வழங்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, பொதுமக்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டைக்கான காலக்கெடு, இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. ரேஷன்கார்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க, உள்தாள் ஒட்டும் பணி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் துவங்கும். இப்பணி, அனைத்து ரேஷன் கடைகளிலும், திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும். உள்தாள் ஒட்டும் பணியில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, சுழற்சி முறையில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில், உள் தாள்களை ஒட்ட தவறியவர்கள், சனிக்கிழமைகளில், தங்களின் குடும்ப அட்டையை புதுப்பித்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
28-டிச-201214:29:45 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar ஐந்தாண்டுக்கு ஒருமுறை சரியாக குடும்ப அட்டை வழங்க முடியாத உணவுத்துறை நிர்வாகம் அரசு பணியாளர்கள் சரில்லை என்பதை வெளிபடுத்துகிறது. தனி நபர் கார்டு..,குடும்ப கார்டு என வகை படுத்தி வழங் கினால் அதிக கூடுதல் போலி கார்டுகள் புழக்கத்தில் வர வாய்பில்லை..,வாக்காளர் அடையாள அட்டை எண் அடிப்படையில் கட்டுபடுத்தி போலி கார்டுகள் தவிர்க்கலாம். எல்லாம் உரிய அதிகாரி மற்றும் பணியாளர் கைளில் உள்ளது... பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
Shridhar Ragav - chennai,இந்தியா
28-டிச-201212:00:14 IST Report Abuse
Shridhar Ragav ரேஷன் கார்டு புதுபிப்பது அவ்வளவு கஷ்டமா ..??பேங்க் லே passbook முடிஞ்சுட்டா உடனே passbook மாத்தி கொடுங்கரான்களே ..மக்களின் அவதியை புரிந்து கொள்ளுங்கள் புதிய முயற்சி எதாவது செய்யுங்கள் ...எங்கோ கோளாறு இருக்கிறது ..??
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
28-டிச-201210:45:43 IST Report Abuse
சகுனி ரேஷன் அட்டைல எல்லா பக்கமும் முடிஞ்சப்புறம் அடுத்து என்ன செய்யலாம் அப்புடீன்னு ஒவ்வொரு வருஷமும் யோசிக்கிறீங்க பாருங்க ... சான்சே இல்ல ... உங்க மாதிரி ஆளுங்க தான் இப்போ இந்தியாவுக்கே தேவை ... ஒன்னும் அவசரமில்ல ... விஷன் 2035ல இதையும் சேத்துடுங்க ... தீர்ந்தது பிரச்சினை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்