Advertisement
"டீசல், சமையல் காஸ் விலையை படிப்படியாக அதிகரிப்பது அவசியம்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2012,23:27 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,00:29 IST

.புதுடில்லி:""டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் போன்ற பெட்ரோலிய பொருட்களின் விலைகளை, படிப்படியாக உயர்த்த வேண்டியது அவசியம்; அப்போது தான், வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் செலவிட முடியும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தேசிய வளர்ச்சி குழும கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சின் முக்கிய அம்சங்கள்:
நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வளர்ச்சியை அடைய, நாடு பல சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

2004ம் ஆண்டுக்குப் பின், நாட்டில் வறுமை, ஆண்டுக்கு, 2 சதவீதம் குறைந்து வருகிறது.
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 8 சதவீத வளர்ச்சியை அடைய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 2011-12ம் நிதியாண்டில், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், அதை விட குறைவாக, 5.9 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. பொருளாதார மந்த நிலைமையை மாற்ற, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.
நாடு, 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் எனில், மானியங்களை குறைக்க வேண்டும்; அதற்கு, டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு போன்ற பெட்ரோலிய பொருட்களின் விலையை, படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
எரிபொருட்களுக்காக வழங்கப்படும் மானியத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருப்பதால், மாநில அரசுகள் இந்த விஷயத்தில், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மக்களிடம் இதுதொடர்பான, விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
மின்சாரத்தை பயன்படுத்துவோரில், ஒரு பிரிவினருக்கு, மிக குறைவான கட்டணத்தில், மின் வினியோகம் செய்யப்படுகிறது; அது மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
மூகத்தில், குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு மானியம் வழங்குவது அவசியம்; ஆனாலும், அந்த மானியம், உரியவர்களை, சரியான முறையில் சென்றடைய வேண்டும். மானியங்கள் வழங்குவது, குறிப்பிட்ட அளவை தாண்டும் போது, திட்டச் செலவுகளை குறைக்க வேண்டியது ஏற்படும் அல்லது நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்.
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில், குறிப்பிடப்பட்டுள்ள, திட்டங்களை நிறைவேற்ற, இலக்குகளை அடைய, வருவாயை பெருக்க வேண்டும். அதற்கு உறுதியான பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொருட்கள் மற்றும் சேவை வரியை விரைவாக அமல்படுத்த வேண்டும்.
பெண்களின் பாதுகாப்புக்கு, மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும்.
கற்பழிப்பு போன்ற செக்ஸ் ரீதியான கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனையை அதிகரிக்கும் வகையில், தற்போதுள்ள சட்டங்கள் திருத்தப்படும்.
ரக்கூடிய ஆண்டுகளில், உணவு தானியங்களின் தேவை அதிகரிக்கும். இந்தத் தேவையை பூர்த்தி செய்ய, விளை நிலங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்; அதேநேரத்தில், விவசாயிகளின் வருமானமும் கூட வேண்டும்.
விவசாயத் துறையை அதிக அளவிலான நபர்கள் சார்ந்திருப்பது தடுக்கப்பட வேண்டும்; அதற்குப் பதிலாக, அவர்களில் குறிப்பிட்ட பிரிவினர், விவசாயம் சாராத துறைகளில், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர் மட்டும், விவசாயத்தை சார்ந்திருப்பதன் மூலம், அவர்களின் வருமானம் அதிகரிக்கும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (24)
S.SANGEETHA - namakkal,இந்தியா
28-டிச-201213:25:33 IST Report Abuse
S.SANGEETHA இ இ இதை தான் எதிர்பார்த்தேன். நீ எல்லாம் ஒரு பிரதமர் சீ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mohan jayagopal - chennai,இந்தியா
28-டிச-201213:00:17 IST Report Abuse
mohan jayagopal படி படியா விளைய எத்தி அந்த பணத்த வச்சி, பொருளாதார வளர்சிய? என்ன கட்ட அழிச்சி ரோடு போட போறீங்களா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jeans bala - CHENNAI,இந்தியா
28-டிச-201212:48:57 IST Report Abuse
jeans bala எப்படியும் அடுத்த election காங்கிரஸ் வராது என்பது அவர்களுக்கே தெரியும் ஆகவே விலைவாசி ஏற்றி அவர்களின் பையை நிரப்புகிறார்கள் ஏழை மக்களின் வைற்று இரைச்சலை .......................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sankar Ramaoorthy - Sydney,ஆஸ்திரேலியா
28-டிச-201212:44:36 IST Report Abuse
Sankar Ramaoorthy உங்களை ஆட்சியிலிருந்து கிழே இறக்குவதும் அவசியம் .......................
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
I Love India - Bangalore,இந்தியா
28-டிச-201211:14:39 IST Report Abuse
I Love India இவ்வளவு சரியாக பேசும் நீர், ஏன் ஊழழை தடுப்பது மற்றும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதை பற்றி பேசுவதும் இல்லை அதற்க்கான முயற்சி அல்லது சட்டம் நிறைவேற்றுவது பற்றி பேசுவதில்லை ? மக்களை அடி மட்டம் வரை சுரண்டி அரசியல் வாதி என்ற ஒரு கூட்டம் மட்டும் கொழுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்திய மக்களுக்கு ஆட்சி நடத்துங்கள் இந்தியனாக வீரத்துடன் இருங்கள், என்று அடிமை விலங்கை அறுத்து இந்தியனாக சிந்திக்க போகிறீர்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
28-டிச-201216:36:42 IST Report Abuse
Hari Dossஅது அவர்களின் விவசாயம் அல்லவா? அதைத் தான் வளர்க்கப் பார்க்கிறார்கள்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - madurai,இந்தியா
28-டிச-201210:37:44 IST Report Abuse
saravanan அந்நியர்களின் முதுகெலும்பான இவற்றின் விலைகள் உயரவில்லைஎனில், அவர்களின் ஏஜெண்டுகளான இவர்களுக்கு என்ன மதிப்பு உள்ளது? அதனால்தான் இந்த பேச்சு.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
28-டிச-201210:36:41 IST Report Abuse
பட்டிகாட்டான்   எதுக்கு படிப்படியா ஏத்துறது? ... பேசாம ரவுண்டா ஒரு சிலிண்டர் 5000னு எதிருங்க ... ஒரு பயலும் வாங்க மாட்டான் .... சும்மா சும்மா எத்துற வேலையும் இல்ல ... இறக்குமதி பண்ற செலவும் மிச்சம் ... இந்திய ரூபாயின் மதிப்பும் ஆட்டமேட்டிக்கா ஏறும் .... நீயெல்லாம் ஒரு பொருளாதார மேதை? ... எல்லாம் எங்க தலை எழுத்து
Rate this:
0 members
1 members
18 members
Share this comment
Ponraj D - chennai,இந்தியா
28-டிச-201210:30:04 IST Report Abuse
Ponraj D 2004ம் ஆண்டுக்குப் பின், நாட்டில் வறுமை, ஆண்டுக்கு, 2 சதவீதம் குறைந்து வருகிறது. யாருக்கு? அரசுக்கா இல்லை மக்களுக்கா?
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
mohan - chennai,இந்தியா
28-டிச-201210:26:25 IST Report Abuse
mohan காங்கிரஸ் என்ற private company நன்றாக செயல்படுகிறது. அதன் ஊழியர்கள் 140 கோடி பேர்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
bava kassim - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-டிச-201210:06:13 IST Report Abuse
bava kassim Dear manmohan singh sir, you are the high qualified person in india. how when your brain scrambled nobodys knows. ypur not comfor for Administration and future india. Please go home. tee key.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.