புதுடில்லி:பொருளாதார வளர்ச்சியில், குஜராத்தை பின்னுக்கு தள்ளி, முன்னேற்றம் அடைந்துள்ளது பீகார் மாநிலம்."பாரதிய ஜனதாவை சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநிலம், அனைத்து மட்டத்திலும் வளர்ச்சி அடைந்துள்ளது' என்ற, பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், மிகவும் பின்தங்கிய, சட்டம் - ஒழுங்கு அறவே இல்லாத, பீகார் மாநிலம் தான், 2010ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக விளங்குகிறது என்பதை, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:கடந்த, 2001 - 2005ம் ஆண்டுகளில், 2.9 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், மிகவும் பின்தங்கிய மாநிலமாக விளங்கிய பீகார், 2006 - 2010ம் ஆண்டுகளில், 10.9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் மூலம், வேகமாக வளர்ச்சி அடைந்த மாநிலங்களில், பீகார் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதே நேரத்தில், 2001 - 2005ம் ஆண்டுகளில், மிக வேகமாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக, 11 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்த குஜராத், 2006 - 2010ம் ஆண்டுகளில், வீழ்ச்சி அடைந்து, 9.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை மட்டுமே பெற்றது. மேலும், அந்த கால கட்டத்தில், வேகமாக வளர்ச்சி அடைந்த, சத்தீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களை விட, குஜராத் பின்தங்கி இருந்தது.அது மட்டுமின்றி, 2006 - 2010ல், வளர்ச்சி அடைந்த, 17 மாநிலங்களில், குஜராத் மட்டும் தான், பொருளாதார வீழ்ச்சி அடைந்த மாநிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
"குஜராத் முதல்வராக நேற்று முன்தினம், நான்காவது முறையாக, பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி மீது, அந்த மாநில மக்களும், பிற மாநிலத்தவர்களும் வைத்துள்ள நம்பிக்கையை, வரும் காலங்களில் அவர் காப்பாற்றுவார் என நம்பலாம்' என்கின்றனர், பொருளாதார ஆய்வாளர்கள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு நாளைக்கு 25 ரூபாய்க்கு மேல் ஒருவன் சம்பாதித்தால் அவன் ஏழை இல்லை என்று கூறிய அரசு அல்லவா.. அதனால்தான் பீகார் முன்னேறியுள்ளது என்றும் கூறுகிறது... அடிப்படை வசதிகளை விடுங்கள்.. பீகாரில் மாலை 6 மணிக்கு மேல் வெளியே சென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. இந்த லட்சணத்தில் எதற்கு இந்த வீண் புள்ளி விபர குழப்பம் எல்லாம்...
பீகார் மக்கள் வெளி மாநிலங்களுக்கு (தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு) சென்று உழைக்கிறார்கள் ஊதியம் பெற்று தங்கள் மாநிலத்திற்கு அனுப்புகிறார்கள். மாநிலம் வளர்கிறது. இதில் இளைகர்கள் அதிகம். உதார்ணதிற்கு மொபைல் போன் ரீசார்ஜ் செய்வது முதற்கொண்டு அவர்கள் இருக்குமிடத்திலிருந்து பீகாருக்கு செய்துகொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் பீகார் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து உள்ளது. இதுதான் உண்மையான காரணம். இது நம் தமிழ்நாட்டில் கண்கூடு.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.