சென்னை:""தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற, முதல்வர் ஜெயலலிதாவை, அவமானப்படுத்தியிருந்தால், அதை நான் கண்டிக்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை அறிவாலயத்தில், கருணாநிதி அளித்த பேட்டி:டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், கலந்து கொள்ள சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கே பேசுவதற்கு போது மான நேரம் தரப்படவில்லை என்றும், தமிழக அரசை அவமானப்படுத்தி விட்டதாகவும், குறை கூறி வெளிநடப்பு செய்திருக்கிறார்.
அவரை அவமானப்படுத்தியிருந்தால், அதை நான் கண்டிக்கிறேன். நான் பல முதல்வர்கள் மாநாடுகளுக்கும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில், முதல்வர்கள் தங்களுடைய பேச்சுக்களை, விரிவாக அச்சடித்து, புத்தகமாக மேஜைகளில் வைத்து விடுவர்.
அவர்களுக்கென்று, ஒதுக்கப்பட்ட நேரம் வரையில், படிப்பர். மீதமுள்ள பகுதிகளை, பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வர். அப்படித் தான், முதல்வர்கள் மாநாட்டில் பழக்கம். நானும் ஐந்து முறை முதல்வராக இருந்த போது, அந்தப் பழக்கத்தை டில்லியில் பார்த்திருக்கிறேன். ஆனால், ஜெயலலிதா வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார்.
முதலில் தான் பேச வேண்டுமென்றும், சென்னைக்குத் திரும்ப வேண்டுமென்றும், நம்முடைய முதல்வர் சொன்னதை அடுத்து, முதலில் பேசுமாறு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எல்லா முதல்வர்களுக்கும், பத்து நிமிடம் என்று, எப்போதும் போல சொல்லப்பட்டிருக்கிறது.
பத்து நிமிடம் முடிந்த பின், இதுபோன்ற கூட்டங்களில் பேசும் போது, ஒரு அடையாள மணி அடிப்பர். அவ்வாறு மணி அடித்தவுடன், பேச்சை முடித்து விட வேண்டும் என்று கருதக் கூடாது.
அதற்கு மேல் ஐந்து நிமிடம், இன்னும் சொல்லப் போனால், பத்து நிமிடம் கூட, முதல்வர்கள் பேசுவது உண்டு; நானும் அப்படி பேசியிருக்கிறேன். நேரம் இருக்கிற வரை பேசிவிட்டு, மீதப் பகுதிகளை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டு, பத்திரிகைகளுக்கு முழு பேச்சையும் அளித்து விடலாம்; இது தான் நடைமுறை.
அ.தி.மு.க.,வினர் டில்லியில் ஜனநாயகம் இல்லை என்கின்றனர். ஆனால், தமிழகத்தில், தூத்துக்குடி கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு, அதை நம்பி போடப்பட்ட பந்தலை, அரசுக் காவலர்கள் பிரிக்கின்றனர். இந்த ஜனநாயகவாதிகள் தான், மத்திய அரசைப் பற்றி குறை கூறுகின்றனர்; கண்டிக்கின்றனர்; வேடிக்கையாக இருக்கிறது.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த பிரச்னை முற்றிலும் அரசியலாக்கப் பட்டிருக்கிறது. தேசிய வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் நேரக்குறைவு கருதி விதிக்கப்பட்ட பத்து நிமிட காட்டுப்பாட்டை, ஏதோ தன்னை அவமானப்படுத்தவும், முதல்வர்களின் குரலை ஒடுக்கவும் மத்திய ஆளும் கட்சி செய்த திட்டம் என்று நமது முதல்வர் கோபப்பட்டு வெளி நடப்பு செய்திருப்பது ஒரு அரசியல் நாடகம். தமிழகத்தின் பிரச்னைகளை முழுமையாக பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழர்களின் கோபத்தை மத்திய அரசு மீது திருப்பி விடும் ஒரு அரசியல் தந்திரம். ஏற்கனவே தயாரித்து அச்சடிக்கப்பட்ட முதல்வரின் உரை முழுமையாக பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது. இது போன்ற மாநாடுகளில் அச்சடிக்கப்பட்ட உரையை ஒரு தலைவர் வாசிப்பது வெறும் ஒரு சம்பிரதாயமாக இருக்கும் போது, முழுமையாகப் பேச தனக்கு வாய்ப்பு தராமல் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நமது முதல்வர் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
என் தமிழ் மக்களே இதற்கு மேலும் கருணாநிதியை போன்ற நபரை தமிழ் நாட்டில் இல்லாமல் செய்யவேண்டும் MONEY MAKE MANY THINGS என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறார் .தலைப்பு முதல்வருக்கு அவமானம் கருணாநிதி கண்டனம் அதை முழுவதுமாக படித்துவிட்டு அவருடைய ராஜ தந்திரத்தை புரிந்துகொள்ளுங்கள் தலைப்பை பார்க்கும் போது யாருக்கும் படிக்க தோன்றவேண்டும் அதே நேரத்தில் படித்துவிட்டு மத்திய அரசு செய்தது தவறு இல்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் செய்ததுதான் தவறு என்றும் அவர் உரையில் சொல்லி இருக்கிறார் ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன் இனிமேல் உன் ஜம்பம் தமிழ் நாட்டில் பலிக்காது .
The allotted time was 10 min and this was very clearly intimated to the people present in the meeting . Almost 40 people have spoken in the meeting including BJP chief Minister Mr. Modi from BJP. I did not see any news wherein other state CM's blaming the time allotted. In my opinion those 10 min could have been effectively used to damand the requirements of TN instead of playing the blame game. One should be tactical in getting things done. Thanks.
If a body of such a national importance do not have enough time to listen, then there is a fundamental problem of 'listening'. This meeting could have been structured in such a way that everyone gets enough time and attention and more importantly to go into the depth necessary enough. Else I would consider this forum as something run for formality. Tamil Nadu is facing problems in several fronts - namely power and water. To counter, CM needs not only courage but plenty of money and support from the central government. India has gone to dogs primarily due to running meetings and discussions for the sake of formality both at government and private sectors. ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.