பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தி.மு.க., உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக, ரித்திஷ் எம்.பி., உட்பட, 50 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்ட, தி.மு.க., செயலர், சுப.தங்கவேலன், ரித்திஷ் எம்.பி., இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல், அவ்வப்போது மோதல்களாக வெடித்து வருகிறது. இந்நிலையில், பரமக்குடியில் நேற்று முன்தினம் இரவு லாட்ஜ் ஒன்றில், தி.மு.க., தேர்தல் ஆணையர், ஆலந்தூர் பாரதி தலைமையில், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அங்கு வந்த ஒரு கும்பல், கற்களை வீசி, லாட்ஜின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்தது. இது குறித்து வக்கீல் கருணாநிதி புகார்படி, 23 பேர் மீது, பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆற்றுப்பாலம் அருகில் உள்ள, தன், எஸ்.டி.டி., பூத்தை சேதப்படுத்தியதாக, நயினார்கோயில், தி.மு.க., ஒன்றிய செயலர் திவாகரன், கொடுத்த புகாரை அடுத்து, ரித்திஷ் எம்.பி., மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். லாட்ஜுக்கு சென்று உறுப்பினர் அட்டையை கேட்ட போது, தன்னை தாக்கியதாக, முனுசாமி என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, சுப.தங்கவேலன் கோஷ்டியைச் சேர்ந்த, 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதவரை கைதானவர்களின் எண்ணிக்கை, 50. பரமக்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.