Chidambaram's call to super star rajini: participate in the‌ book release | சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு, "திடீர்' அழைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு, "திடீர்' அழைப்பு

Added : டிச 27, 2012 | கருத்துகள் (69)
Advertisement
 சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு, "திடீர்' அழைப்பு

"சிதம்பரம் ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், ரஜினியும் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதால், நடப்பு அரசியல் குறித்து, அவர், "வாய்ஸ்' கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர், "சிதம்பரம் ஒரு பார்வை' என்ற தலைப்பில், கவிஞர் இலக்கியா நடராஜன் தொகுத்து எழுதிய, நூல் வெளியீட்டு விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில், நாளை மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. விழாவில், நூலின் முதல் பிரதியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்; அதை, சிதம்பரத்தின் தாயார், லட்சுமி ஆச்சி பெற்று கொள்கிறார். இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

நூல் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வேண்டும் என, சிதம்பரம் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஜினியுடன் தொடர்பு கொண்டு, நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர். விழாவில் பங்கேற்க, ரஜினி இசைவு தெரிவித்துள்ளார்.

கடந்த, 1996ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியை உடைத்து, மறைந்த தலைவர் மூப்பனார் மற்றும் சிதம்பரம் போன்றோர் முயற்சியால், த.மா.கா., உதயமானது. அந்த தேர்தலில், தி.மு.க., - த.மா.கா., கூட்டணிக்கு, ஆதரவாக, ரஜினி, "வாய்ஸ்' கொடுத்தார்.
இம்மாதம், 12ம்தேதி, ரஜினியின் பிறந்த தின விழாவை, அவரது ரசிகர்கள் சென்னையில் கொண்டாடினர். இந்த விழாவில், ரஜினி பேசுகையில், "தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் வற்புறுத்தியதால் தான், 1996ல் தேர்தலில், தி.மு.க.,- த.மா.கா., கூட்டணிக்கு ஆதரவாக, "வாய்ஸ்' கொடுத்தேன்' என தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு பின், இந்த கருத்தை ரஜினி வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, சிதம்பரம், ஞானதேசிகன் போன்றவர்கள் கைகோர்க்கும் மேடையில், ரஜினி பங்கேற்பதால், நடப்பு அரசியல் குறித்து, தன் கருத்துக் களை பகிர்ந்து கொண்டு, பரபரப்பை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது.

-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
28-டிச-201219:28:41 IST Report Abuse
G. Madeswaran It is the way of Honour given to Rajini for his B'day & successful life and for his friship in a sui chance, it is also proud to them if great Rajini participate in that P.C. book release and proud for us too.. Already Rajini's successive life history included in CBSE history book. P.C. also great achiever. We want to hear Rajini's voice not only in the screen but also in these type of functions too.. Rajini is very clear now, Valaigalilae Meen Sikkalam, thaneer rum Sikkadhu..Its for friship. If Rajini think, he can be a great epi-center for any big good vibrations to the entire world, but he keeps silent Rajini is LEG Rajini is MASS Rajini is MAGNET for all Humanbeings, even if we keep away we can feel the powerful force from him, that is our FORCE,STRENGTH,POSITIVE STEPS AND ALL....Proud of Rajini..
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
28-டிச-201218:41:04 IST Report Abuse
g.s,rajan கூட்டத்துல பாத்து கலந்துக்குங்க விழாவுல கலந்துகிட்டா ஏதாவது புதுசா" விழா வரி" அப்படின்னு போட்டாலும் போட்டுருவாரு ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
28-டிச-201218:28:54 IST Report Abuse
Kankatharan  1996ல் பார்க்கப்பட்ட எதிர்பார்ப்பு இன்றைக்கு இல்லை. அன்று ரஜனியின் உள்ளுடன் அவ்வளவாக அறியப்படாத ஒரு காலம், இன்றைக்கு ஒன்றும் அப்படியல்ல.ரஜனியைப்பற்றி தமிழ்நாடு நன்றாக அறிந்திருக்கிறது. ரஜனிக்கும் அது நன்றாகவே தெரியும் எனவே ரஜனி கடசிகாலத்தில் தானாக கரியை பூசிக்கொள்ளமாட்டார். கழுவின மீனில் நழுவின மீனாக ரஜனி வெளியே வருவதை நாளைய செய்தியில் அனைவரும் அறிவர்
Rate this:
Share this comment
Cancel
raghavan - chennai,இந்தியா
28-டிச-201217:48:16 IST Report Abuse
raghavan அரசியிலை பொறுத்தவரை சிவாஜி(நடிகர் திலகம் )வழியில் சிவாஜி தி பாஸ் செல்லவேண்டாம், இந்த அருணாசலம் சொன்னால் இனிமேல் அடுத்த வீட்டுக்காரன் கூட கேட்க மாட்டான். இனி நீங்கள் சிதம்பரம் ( தில்லை நடராஜன் ) கோவிலை சுற்றத்தான் லாயக்கு.
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
28-டிச-201217:18:00 IST Report Abuse
Vaal Payyan திரு ரஜினி அவர்களே ... இது உங்களுக்கு வேண்டாம் ... வெளியில போற ஓணானை எடுத்து வேட்டி உள்ள விட்டுகாதீங்க ... உங்கள் அமைதி உங்களுக்கு அமைதியை தேடி தரும் ...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-டிச-201215:13:44 IST Report Abuse
Nallavan Nallavan ரஜினி ஜாக்கிரதை ஏற்கனவே திமுக-வால் கறிவேப்பிலைக் கொத்து போல உபயோகிக்கப்பட்டார் 1996 ஆம் ஆண்டு தமாகா-திமுக கூட்டணிக்காக வாய்ஸ் கொடுத்தார் ரஜினி அக் கூட்டணியும் வெற்றி பெற்றது கலைஞர் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தும் பொழுது மூத்த கூட்டணித் தலைவர்கள், முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் என்று பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு. இறுதியாக சாதாரண திமுக பிரமுகர்களின் பெயரையெல்லாம் குறிப்பிட்டு விட்டு வேண்டா வெறுப்பாக ரஜினி பெயரையும் சேர்த்துச் சொன்னார் பட்டது போதாதா ரஜினி?
Rate this:
Share this comment
Cancel
vasanthakumar - chennai,இந்தியா
28-டிச-201214:43:39 IST Report Abuse
vasanthakumar ரஜினிக்கு தேவையில்லாத ஒன்று......
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
28-டிச-201214:42:00 IST Report Abuse
grg ரஜனி தன்னுடைய மரியாதையை காப்பற்றிக் கொள்ள வேண்டும். சிதம்பரம் பணக்கரார்களுக்கு மட்டும் தான். அவருக்கு மதிய மற்றும் கீழ் நிலையில் உள்ளவர்கள் பற்றி எப்போதும் கவலை இல்லை. முதிலில் கருப்பு பணத்தை அந்நிய நாடுகளில் இருந்து கொண்டு வரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
28-டிச-201213:34:09 IST Report Abuse
தமிழ் குடிமகன் சிதம்பரத்தின் சாதனைகளை புத்தகத்தில் வடிக்க முடியாது ,,,,,,,,,,,,கல்வெட்டில் பொறிக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
28-டிச-201213:28:48 IST Report Abuse
S.Govindarajan. சிதம்பரத்தால் நாட்டுக்கு எந்த நன்மையையும் இல்லை. தமிழ் மக்களுக்கும் இல்லை. இரண்டு முறை நிதி அமைச்சராக வந்து என்ன பயன்.? விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு. , அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு. இப்படி எத்தனையோ இன்னல்களை மக்கள் அனுபவிக்கிறார்கள் .பொதுவாக ஒருவரைப் பற்றிய நூலில் துதிபாடல்கள் அதிகள் இருக்கும். உண்மை நிலை, நடுவுநிலை விமர்சனம் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை