திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், 116 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமரின் உருவ பொம்மையை எரித்த, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட, 2,198 பேர் கைது செய்யப்பட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்து, 1,000 இடங்களில் போராட்டம் மற்றும் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க, இந்திய கம்யூ., விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், முன்னாள் எம்.எல்.ஏ., சிவபுண்ணியம், திருவாரூரில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன், மாவட்ட விவசாய சங்க செயலர் மாசிலாமணி, கோட்டூரில் மாவட்ட துணை செயலர் பாண்டியன், திருத்துறைப் பூண்டியில் எம்.எல்.ஏ., உலகநாதன், நீடாமங்கலத்தில் ஒன்றிய செயலர் தமிழார்வன் உள்ளிட்டோர் தலைமையில், அக்கட்சியின் விவசாய சங்கத்தினர், 116 இடங்களில், பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மையை எரித்த, 319 பெண்கள் உள்ளிட்ட, 2,198 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.