பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விடுதலை சிறுத்தைகள் மீது வீண் பழி போட்ட பா.ம.க., : சேலம் பிரமுகரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் ராமதாஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: சேலத்தில், பா.ம.க., சார்பில், "அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை' கலந்தாய்வு கூட்டத்தில், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு, கொலை மிரட்டல் விடுத்து, தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட, பா.ம.க., பிரமுகரின் செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம், பிரச்னையை திசை திருப்ப, விடுதலைச் சிறுத்தைகள் மீது, வீண் பழி சுமத்தி, தப்பிக்கும் முயற்சியில், பா.ம.க., இளைஞரணி நிர்வாகி ஈடுபட்டார். கொலை மிரட்டல் விடுத்தவர், பா.ம.க., பிரமுகர் என்பதை, பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்ததால், வேறுவழியில்லாமல், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்தார்.
சேலம், எல்.ஆர்.என்., ஓட்டலில், பா.ம.க., சார்பில் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவையின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பல்வேறு சமுதாய அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்ததும், ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
கூட்டம் எப்பொழுது முடியும் என, கேட்டபடி அரங்கினுள் பத்திரிகையாளர், போட்டோகிராபர்கள் நுழைந்தனர். அப்போது, பா.ம.க., பிரமுகர் பார்த்திபன், ஒரு போட்டோகிராபரின் கையை பிடித்து தரதரவென இழுத்து தாக்க முயன்றதுடன், ""பத்திரிகையாளர்களை நான்கு காட்டி காட்டினால் சரியாகி விடும். இவர்களை எல்லாம் ரூமில் போட்டு அடைத்து, போட்டு தாக்க வேண்டும்,'' என கொலை மிரட்டல் விடுத்தார். போட்டோகிராபரை வெளியே தள்ளிவிட்டு, மேலும், பத்திரிகையாளர்களை ஆபாசமாக அர்ச்சித்தார். அங்கு கூடியிருந்த நிருபர்கள் கொதிப்படைந்து, சத்தம் போடவும், கொலை மிரட்டல் விடுத்தவர், அங்கிருந்து, "நைசாக' நழுவி சென்றார். பா.ம.க., செய்தியை, மக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், செய்தி புறக்கணிப்பு முடிவு எடுத்தனர். இதை அறிந்த பா.ம.க., மாநில இளைஞரணி செயலர் அருள், மாநகர செயலர் கதிர்ராஜரத்தினம், "மாஜி' எம்.எல்.ஏ., தமிழரசு ஆகியோர் பத்திரிகையாளர்களிடம மன்னிப்பு கேட்டு கொண்டதுடன், சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
"கொலை மிரட்டல் விடுத்த, பா.ம.க., பிரமுகர் பார்த்திபனை அழைத்து வாருங்கள்' என்று பத்திரிகையாளர்கள் கூறினர்.
உடனடியாக, பா.ம.க., அருள், ""விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே ராமதாஸ் கலந்து கொள்ளும் கூட்டத்தை சதி செய்து, எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற விஷமத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். பத்திரிகையாளரை மிரட்டியவர், பா.ம.க., பிரமுகர் அல்ல; அவரை யார் என்று எங்களுக்கே தெரியவில்லை. பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வந்துள்ளதால், உங்களை திட்டியது, பா.ம.க.,வை சேர்ந்தவர் என்று கூறிவிட முடியாது,'' என்றார்.

பா.ம.க., அருளின் பிரின்ட்டிங் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர் தான் பார்த்திபன் என்பதும், அவர், பா.ம.க.,வை சேர்ந்தவர் என்பதை பத்திரிகையாளர்கள் நன்கு அறிந்து இருந்ததால், சம்பவ இடத்துக்கு அழைத்து வர வேண்டும் என்றனர்.
நீண்ட நேரத்துக்கு பின், பா.ம.க.,வினர், பார்த்திபனை அழைத்து வந்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிறுத்தினர். பார்த்திபன், "பாக்கெட்டில் இருந்த, பா.ம.க., உறுப்பினருக்கான அடையாள அட்டையை பத்திரிகையாளர்கள் கண்டு பிடித்து, "விடுதலை சிறுத்தை கட்சி மீது, வீண் பழி சுமத்தி, ஏன் தப்பித்து கொள்ள பார்க்கிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பா.ம.க.,வினர் மவுனம் சாதித்தனர். பின், நடந்த சம்பவத்துக்கு பார்த்திபன் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டார்.
பா.ம.க., பிரமுகர், பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பா.ம.க., பிரமுகர் என்பதால், வேறு வழியில்லாமல், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பத்திரிகையாளர்களிடம் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-டிச-201211:49:17 IST Report Abuse
Pugazh V மற்றவர் குடும்ப விஷயங்களில் கூட தலையிட்டு, அத்தை பெண்ணைக் கைப் பிடிப்பவனை வெட்டுவோம் என்று சொல்லும் தலைவரின் கட்சி தானே பா ம க. கேவலம். இவரெல்லாம் மருத்துவப் படிப்பு படித்தும் என்ன பயன்? தாழ்த்தப்பட்ட இனத்தவரின் எதிரி பா ம க என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிவிட்டது. இல்லாவிடில் திருமா வின் கட்சிப் பெயரை சொல்வானேன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்