In 2015, the "smart" ration card Introduction: Indent only two years | 2015ல் "ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் தான்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

2015ல் "ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் தான்

Added : டிச 27, 2012 | கருத்துகள் (15)
Advertisement
 2015ல் "ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் தான்

தற்போது, புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளை, அடுத்த ஓராண்டு காலத்துக்கு, நீட்டித்து, அரசு உத்தரவிட்டாலும், 2014ம் ஆண்டும், இதே நடைமுறை தொடரும். 2015ம் ஆண்டில் தான், உடற்கூறு அடிப்படையிலான, "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' அமலுக்கு வர உள்ளது.

தமிழகத்தில், தற்போது, புழக்கத்தில் இருந்து வரும் ரேஷன் கார்டுகள், 2010ம் ஆண்டே, காலாவதியாகி விட்டன. 2011 மற்றும் 12ம் ஆண்டுகளுக்கு, ரேஷன் கார்டுகளில், கூடுதலாக, உள்தாள் இணைக்கப்பட்டு, கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த உள்தாள்களும், இந்த மாதத்துடன், முடிகின்றன.ஜனவரி, 1 முதல், பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், புதிதாக ரேஷன் கார்டுகளில், உள்தாள்கள் இணைக்கப்பட வேண்டும்.

இரண்டு மாதம்:இது தொடர்பாக, கடந்த வாரம், அரசு பிறப்பித்த உத்தரவில், "தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2013 ஜன., 1ம் தேதியில் இருந்து, டிச., 31 வரை நீட்டிக்கப்படுகிறது' என, அறிவித்துள்ளது. உள்தாட்களை அச்சடித்து, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வினியோகித்து, கார்டுகளில் ஒட்டும் பணி நிறைவடைய, அடுத்த, இரண்டு மாதங்களாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கார்டுகளின், செல்லத்தக்க காலம், ஓராண்டுக்கு, அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டாலும், அடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்தே, உள்தாள்களை வழங்க, அரசு, முடிவெடுத்துள்ளது. தற்போது, அச்சிட உள்ள, உட்தாள்கள், 2013 மற்றும் 2014ம் ஆண்டுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், புதிதாக, இனி ரேஷன் கார்டு வழங்கப்படும்போது, அது மின்னணு அம்சம் பொருந்தியதாகவே இருக்கும். தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின் அடிப்படையில், கண் கருவிழி, கைவிரல் ரேகை பதிவு கொண்ட, உடற்கூறு முறையிலான, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது.

கருவிழி பதிவு:தமிழகத்தில், தற்போது, கோவை உட்பட, பல மாவட்டங்களில் தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின்படி, கண் கருவிழி மற்றும் விரல் ரேகை பதிவுப் பணி நடந்து வருகிறது. முழுமையான கணக்கெடுப்புப் பணி முடிந்து, தகவல் தொகுப்பை பெற, குறைந்தபட்சம் ஓராண்டாகும். அதற்கு, பின் தான், ஸ்மாட் கார்டு, தயாரிப்பு பணிகளை துவங்க முடியும்.

தமிழகம் முழுவதும், 2015ல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு புழக்கத்துக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கு முன், முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், பரீட்சார்த்தமான முறையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குவதற்கான, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nsathasivan - chennai,இந்தியா
28-டிச-201219:28:24 IST Report Abuse
nsathasivan இன்னும் நான்கு ஆண்டுகள் பேப்பர் ஓட்டசொன்னாலும் சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raja Iyyaswamy - darwin,ஆஸ்திரியா
28-டிச-201218:47:16 IST Report Abuse
Raja Iyyaswamy Dear Udaya, please check with the ration office and if you do not get any answer, please apply through Right to Information Act to know the exact reason for delay
Rate this:
Share this comment
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
28-டிச-201217:14:49 IST Report Abuse
Dinesh Pandian முதல்ல npr கணக்கு எடுத்தாச்ச? பிஒமேற்றிக் விவரம் எல்லாம் எடுத்தாச்ச? எப்படி 2015 ல கார்டு கொடுக்கறது ?
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
28-டிச-201216:48:36 IST Report Abuse
Arumugam வெளிநாடுகளில் ரேஷன் கார்டு முறை கிடையாது. நம் நாட்டிலும் இந்த ரேஷன் கார்டுமுறையை நீக்கி விட்டால் பொதுமக்கள் விலை குறைவான கடையில் தங்களுக்கு தேவையானதை வாங்கிகொள்வார்கள். ரேஷன் கார்டு ஏழை, பணக்காரன் என்ற பேதத்தை வளர்க்கிறது. பொருளின் விலையையை அரசு பரிந்துரை செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
uday - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-டிச-201215:47:30 IST Report Abuse
uday நான் ரேஷன் கார்டு அப்பளை செய்து இரண்டு ஆண்டு காலம் ஆயிடுச்சி இன்னும் கொடுக்க படவில்லை மற்றும் என் வீட்டுக்கும் பசங்களுக்கும் எந்த எதிர் கால நன்மைகளும் செய்ய முடியலை அதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன் தயவு செய்து உதய் விழுப்புரம்.
Rate this:
Share this comment
Cancel
S.SANGEETHA - namakkal,இந்தியா
28-டிச-201213:08:17 IST Report Abuse
S.SANGEETHA ஸ்மார்ட் கார்டு வந்தால் மட்டும் சர்க்கரை அளவு சரியாக இருக்குமா? ....?
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
28-டிச-201213:02:49 IST Report Abuse
LAX போகிற போக்கில் மாணவர்கள் பிட் வைத்திருந்து பிடிபட்டால், அரசாங்கம் மட்டும் ரேஷன் கார்டில் பிட் வைக்கிறதே என்று கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை .
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
28-டிச-201211:25:02 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் வரவேற்க வேண்டிய திட்டம்.. ஆனால் இவ்வளவு வருஷம் தேவையா?....
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
28-டிச-201208:46:27 IST Report Abuse
Aboobacker Siddeeq நவீன யுகத்தில் அனைத்து நாடுகளும் சென்று கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் தமிழம் மிகவும் பின்தங்கி வருகிறது.. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் இவ்வாறான பழைய முறை ரேசன் கார்டுகளை உபயோகிப்பது?
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
28-டிச-201211:36:46 IST Report Abuse
K.Sugavanamவேறு எந்த நாட்டில் ரேஷன் கார்டு தர்றாங்கோ சார்?????????...
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
28-டிச-201213:00:06 IST Report Abuse
LAXஅதான் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குன்னு தெளிவா படத்தோட சொல்டாங்கல்ல.......
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
28-டிச-201205:08:22 IST Report Abuse
Baskaran Kasimani இப்பொழுது புதிதாக வருபவை எல்லாம் RFID உள்ளவை. ஸ்மார்ட் கார்டு அதிகம் உபயோகத்தில் இல்லை. அதிகம் படிப்பியில் நேரடியாக தொடர்பு ஏற்படுத்துவதால் எளிதில் கெட்டு விடும். புதிதாக மற்றொன்றை மாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை