கோல்கட்டா:பெண்களை தவறாக சித்தரித்த, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன், அபிஜித்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைக்குரிய வார்த்தைகளை வாபஸ் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியின் மகன், அபிஜித் முகர்ஜி. இவர், மேற்கு வங்க மாநிலம், ஜாங்கிபூர் லோக்சபா தொகுதி, காங்கிரஸ் எம்.பி.,யாக உள்ளார்.
தனியார், "டிவி' ஒன்றுக்கு, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:டில்லியில், மருத்துவ மாணவி, கும்பலால் கற்பழிக்கப்பட்டதை அடுத்து, தலைநகர் டில்லியில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது, கேலியாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக, டில்லி நகர வீதிகளில் இறங்கி போராடும் மாணவியரை பார்க்க முடிகிறது.
ஏராளமான பெண்களும் வருகின்றனர்; அவர்களில் சில பெண்கள் அழகாக இருக்கின்றனர். அவர்களுடன், சற்றும் பொருத்தம் இல்லாமல், மாணவியர் போல் இல்லாமல், பழைய பாத்திரங்களுக்கு, "ஈயம் பூசியது' போல உள்ள சில பெண்களும் வருகின்றனர். அவர்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.எகிப்தில் இப்போது நடக்கும், "ஸ்பிரிங் புரட்சி' போல, டில்லியில், திடீர் திடீரென போராட்டத்தில் ஏராளமானோர் குதிக்கின்றனர். மாணவியருக்கு ஆதரவாக போராடும் அவர்களில், வயதான இந்த பெண்களும் இருப்பது ஏன் என்றே எனக்கு புரியவில்லை.
நானும் மாணவனாக இருந்தவன் தான். பகலில் மெழுகுவர்த்தி ஊர்வலமும், மாலையில், "டிஸ்கோத்தே' பார்ட்டியையும் பார்த்தவன் தான். அது போல தான், டில்லி மாணவியரும். பகலில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்; மாலையில், டிஸ்கோத்தே பார்ட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு, அபிஜித் முகர்ஜி கூறினார்.
இதை அறிந்த, கோல்கட்டா மற்றும் டில்லி பெண்கள் கடும் கோபம்அடைந்தனர். அபிஜித்திற்கு எதிராக, கண்டன கணைகளை தொடுத்தனர்.இதையடுத்து, பேட்டி கொடுத்த தனியார், "டிவி'யை மீண்டும் அழைத்து, "நான், "ஈயம் பூசிய பழைய பாத்திரங்கள்' போல உள்ள என்று, பேசிய வாசகங்களை மட்டும் வாபஸ் பெற்று கொள்கிறேன்' என, அபிஜித் தெரிவித்தார். மேலும், பெண்களை அவதூறாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்றும் கூறினார்.
பெண்கள் பற்றி, அபிஜித் முகர்ஜி தவறாக பேசியதற்கு, அவரின் சகோதரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஷர்மிஸ்தா முகர்ஜி, இது பற்றி கூறியதாவது:என் சகோதரன் அபிஜித் பேசியது எனக்கு மிகுந்த வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது; அவர் அப்படி பேசியிருக்க கூடாது; அவருக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஜனாதிபதி மகன் என்பதற்காக அல்ல, எந்தவொரு தனிப்பட்ட மனிதரும் இவ்வாறு பேச கூடாது.இவ்வாறு, ஷர்மிஸ்தா கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அட என்னங்க இது.. ஊர் சுற்ற கூடாதுன்னு ஆந்திராகாரர் சொன்னதுக்கு எல்லாரும் ஆமோதிச்சிங்க...... இப்போ இவரும் அதே மாதிரி கருத்தை வேறு விதத்தில் சொல்லியிருக்கார்.. என்ன இவரு கொழுப்புல கொஞ்சம் கிண்டலா சொல்றாரு.. இதுக்கு மட்டும் ஏன் குதிக்குரிங்க?ஹ்ம்ம்.. உங்களை பாதுகாத்துக்கொள்ள தான் அப்படிங்குற மாதிரி நாலு வரி சேர்த்துட்டா எந்த கேவலமான எண்ணத்தையும் நாகரிகமாக்கிறலாம்.. அருமை..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.