சென்னை: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய, பொறியாளர் பென்னிகுயிக்கிற்கு, மணிமண்டபம் கட்டும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், திட்டமிட்டபடி, அடுத்த மாதம், திறப்பு விழா நடக்கும், என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேய பொறியாளர், பென்னிகுயிக் கட்டினார். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக, தன் சொத்துக்களை விற்று, அணையை கட்டினார்.
இதனால், அவரது, நினைவை போற்றும் வண்ணம், தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள, லோயர் கேம்பில் பென்னிகுயிக் உருவச்சிலை அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான, கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
பென்னிகுயிக் பிறந்த நாளான, ஜனவரி, 15ல், மணிமண்டபத்தை திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மணிமண்டபம் திறப்புக்கு, இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான, இறுதி கட்டப்பணி, விரைவாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, மதுரை மண்டல பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், "கட்டுமான பணிகள், 90 சதவீதம் முடிந்து விட்டன. கூடுதலாக, மரப் பொருட்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து, திட்டமிட்டபடி திறப்புக்கு தயாராகி விடும்' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.