சென்னை: இந்தியாவுடன் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். இந்தியாபாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. முதல் போட்டி வரும் 30ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணியின் ஏழு வீரர்கள் டில்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை வந்தனர். கேப்டன் மிஸ்பா உல் ஹக், அசார் அலி, யூனிஸ் கான், வஹாப் ரியாஸ், இம்ரான் பர்கத், அன்வர் அலி, தன்வீர் ஆகிய வீரர்கள் சென்னை வந்தனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இவர்கள் அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.