ராமேஸ்வரம்: சூறாவளி காற்றால், திசைமாறி, ராமேஸ்வரம் அருகே, தனுஷ்கோடி மணல் திட்டில் சிக்கிய விசைப்படகை மீனவர்கள் மீட்டனர். வங்க கடலில், உருவாகியுள்ள, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி கடலில் சூறாவளி காற்று வீசுகிறது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத அலைகள் எழுகின்றன. கடல் சீற்றத்தை, பொருட்படுத்தாமல், 26ம்தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து, 658 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் பெரும் சிரமத்துடன், மீன்பிடித்து விட்டு, நேற்று, கரைக்கு திரும்பினர். அப்போது, தனுஷ்கோடி கடல் வழியாக வந்த, தங்கச்சிமடம் ஜெயபால் படகு, திசைமாறி, இரண்டாவது மணல் திட்டில், தரை தட்டி நின்றது.அதில், இருந்த, மீனவர்கள் சுமன், அந்தோணி உள்ளிட்ட, 5 பேரும், படகை மீட்க, வெகு நேரம் போராடியும், முடியவில்லை. வயர்லெஸ் கருவி மூலம், அவ்வழியாக சென்ற, மற்ற மீனவர்களை தொடர்பு கொண்டு, உதவிக்கு அழைத்தனர்.
உடனே, தங்கச்சிமடத்தை சேர்ந்த, இரு படகுளில் வந்த,10 மீனவர்கள் உதவியுடன், திட்டில் சிக்கிய படகை, 2 மணி நேர போராட்டத்திற்கு பின், மீட்டனர். ராமேஸ்வரத்தில் இரண்டு நாட்களாக, சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால், மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.