கூடலூர்: உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் குட்டி யானை ரங்காவை, மனதளவில் உற்சாகப்படுத்தும் வகையில், அதன் தோழி காவேரியை, வனத் துறையினர், விளையாட வைத்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள குட்டி யானை ரங்காவின் கால் முறிவுக்கு, கடந்த இரண்டு வாரங்களாக, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ரங்காவிற்கு காலில் கட்டு போடப்பட்டு, நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரங்கா மனச் சோர்வு அடைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் தோழி காவேரி என்ற குட்டி யானையை, நாள்தோறும் சிகிச்சை அளிக்கும் இடத்துக்கு வரவழைத்து, வனத்துறையினர், விளையாட வைத்து வருகின்றனர். இதனால், ரங்கா ஓரளவு உற்சாகம் அடைந்து வருகிறது.
முதுமலை துணை இயக்குனர் அமீர் ஹாஜா கூறியதாவது: யானை குட்டிக்கு, கால்நடை மருத்துவ குழுவினர் நவீன சிகிச்சை அளித்து, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். யானை தற்போது, பிசியோதெரப்பி சிகிச்சை செய்யப்படுகிறது. அறைக்கு சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரங்காவுடன், குட்டி யானை காவேரியை, தினமும், மூன்று முறை, தலா, 15 நிமிடம் வரை விளையாட வைத்து, அது மனதளவிலும் உற்சாகமடைய, சிகிச்சை அளிக்கிறோம். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் முழு குணமடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அமீர் ஹாஜா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.