சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம், கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய உற்சவமான திருத்தேரோட்டம், நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க நகைகள் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிற்சபையிலிருந்து புறப்பாடு செய்யப்பட்டு சிற்சபை உலா நடந்தது. காலை, 7:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு, 7:30 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து முருகர் தேர் சென்றது. சப்-கலெக்டர் சுப்ரமணியன் உட்பட பலர், காலை, 8:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள், "தில்லை கூத்தரே... நடராஜரே' என, கோஷம் எழுப்பி, திருத்தேரை இழுத்துச் சென்றனர். தொடர்ந்து சிவகாம சுந்தரி அம்மன் தேரோட்டம் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் சென்றது. மாலை, தேர் நிலைக்கு வந்ததும், சிவகாம சுந்தரி சமேத நடராஜர், ராஜ சபை ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருளச் செய்யப்பட்டு, இரவு, 8:00 மணிக்கு விசேஷ லட்சார்ச்சனை நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு விசேஷ மகா அபிஷேகம் நடக்கிறது. 10:00 மணிக்கு சிற்சபையில் ரகசிய பூஜை நடத்தப்பட்டு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, தீர்த்தவாரி நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் நடனம் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.