கரும்பு விவசாயிகள் சார்பில், சென்னையில், நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், கரும்பு விவசாயிகள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர், எம்பாவை எஸ்.யோகநாதன், செயலர் நாகுசுப்ரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, 2012-13ம் ஆண்டு, அரவை பருவத்திற்கு கரும்பு விலையை உயர்த்தி, டன் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் அறிவிக்கக் கோரியும், நிர்வாக சீர்கேடுகளால் நலிவடைந்துள்ள கூட்டுறவு ஆலைகளை லாபத்தில் இயக்க ஆவன செய்யவும், ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைகளை சங்க பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து, மத்திய அரசுக்கு தெரியப்படுத்துதல், கரும்பு கிரயத்தொகை, 14 நாட்களுக்குள் கொடுக்காத ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து, வட்டியுடன் கிரயத்தொகை வழங்க வேண்டும். மின்சாரம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, மழை இன்மையால் ஏற்பட்ட இழப்பு, காலத்தில் பயிர் கடன் கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட கரும்பு மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீடுகள் வழங்க வேண்டும். அரவை பருவ காலங்களில் ஏற்படும் போராட்டத்தை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகில், உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில் தமிழக விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். உண்ணாவிரத போராட்டம், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு (சிபா) தலைமையிலும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியோருடனும் நடக்கிறது. பல்வேறு கட்சி விவசாய அணியினர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.