மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில் சூரியஒளி மின் உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
மடீட்சியா தலைவர் மணிமாறன் கூறியதாவது: மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில், சூரியஒளி மின் உற்பத்தி பற்றிய தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாளை (டிச.,29) மதியம் 2 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.
இதில் சூரியமின் ஆற்றல் உற்பத்தி நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்கமும், பயிற்சியும் அளிக்கிறார்கள். புகழ்பெற்ற சூரியஒளி மின்கலனங்கள் உற்பத்தி நிறுவனத்தினர், சூரியஒளி மின்கலங்கள் அமைப்பு, உற்பத்தி செய்யும் மின்சக்தி அளவு பயன்படும் கருவிகள் பற்றி விளக்கம் அளிப்பர். தொழில்முனைவோர் தங்கள் அலுவலகங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு இலவச ஆலோசனை, உதவிகள் வழங்கப்படும். முன்பதிவுக்கு 0452 -253 9474 ல் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளர்.