Changes in train departure | சென்னை ரயில்கள் இன்று தாமதமாகும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ரயில்கள் இன்று தாமதமாகும்

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இரட்டைப்பாதை பணிகள் நடப்பதால், சென்னைக்கு ரயில்கள் இன்று தாமதமாக வரும், என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே, முண்டியம்பாக்கம் மற்றும் பேரணிக்கு அருகே, இரட்டை ரயில் பாதை பணிகள், நடந்து வருவதால், இன்று, சென்னை வரும் ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும், தாமதமாகவே இயங்கும். திருச்செந்தூர் - சென்னை ரயில், அகலப் பாதை பணிகள் நடக்கும் பகுதியில், மூன்று மணி நேரம் நின்று, பின் சென்னை வரும். திருச்சி - சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், பணிகள் நடக்கும் இடத்தில், இரண்டரை மணி நேரம் நின்று செல்லும். சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து, இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும். சென்னை - புதுச்சேரி ரயில், திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை - குருவாயூர் ரயில், மயிலம் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, விழுப்புரத்திற்கு, இரண்டு மணி நேரம் தாமதமாக சென்று சேரும். எழும்பூர் - திருச்சி ரயில், திண்டிவனத்தில், ஒன்றரை மணி நேரம் நின்று செல்லும். இந்த தகவலை, முதுநிலை செய்தி தொடர்பாளர், வேணுகோபால் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை