சென்னையில் உள்ள, "டேட்டா சென்டர்' அலுவலகத்தில், "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், 20 பேர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை, கோட்டூர்புரத்தில், அரசு தகவல் தொகுப்பு விவர மையம் - டேட்டா சென்டர், இயங்கி வருகிறது. நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இந்த மையம் இருந்தாலும், முழுக்க முழுக்க, கல்வித்துறை தொடர்பான பணிகள் தான் நடந்து வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் மதிப்பெண்களை, கம்ப்யூட்டரில் தொகுத்து, தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணி, இந்த மையத்தில் தான் நடக்கிறது. இந்தப் பணிகளுக்காக, 40, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணியிடம் ஒதுக்கியும், தற்போது, ஐந்து பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மற்ற நிலைகளிலும், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. டேட்டா சென்டரின் நிலைமை, நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக, துறை வட்டாரத்தினர், வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், 20 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை, தற்காலிக அடிப்படையில், பணி நியமனம் செய்து கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், பிளஸ் 2 தேர்ச்சியுடன், தட்டச்சு தகுதி பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்கப்படும்; இவர்களுக்கு, மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.