E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கற்பழிப்பு வழக்குகளை இரண்டு மாதங்களில்விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2012
23:59

புதுடில்லி:"கற்பழிப்பு வழக்குகளை, இரண்டு மாதங்களுக்குள் விசாரணை நிறைவு செய்து, தீர்ப்பு வழங்க வேண்டும்' என, நீதிமன்றங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.கடந்த, 1998ம் ஆண்டில், டில்லி பெண் ஒருவரை, கொள்ளையடிக்க வந்த அகில் என்ற நபர், துப்பாக்கி முனையில், பாலியல் பலாத்காரம் செய்தார்; அதை கண்டித்த பெண்ணின் நண்பரை, துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தினார். இதனால், கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, அகில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நிராகரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஸ்வதந்தர் குமார் மற்றும் இப்ராகீம் கலிபுல்லா ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:பெண்களுக்கு எதிரான, கற்பழிப்பு குற்ற வழக்குகளை, இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என, சட்டத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.எவ்வளவு விரைவாக விசாரிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக சாட்சியங்களை தினமும் விசாரித்து, வழக்கு விசாரணையை, இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, பலமுறை வலியுறுத்தப்பட்டு உள்ளது.


கால தாமதம் ஆவதால் தான், சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாகின்றன. தேவையில்லாமல், விசாரணை நீதிமன்றங்கள், வழக்கை தள்ளி போடக்கூடாது. வழக்கு விசாரணை, திசை மாற எவ்விதத்திலும் நீதிமன்றங்கள் காரணமாக இருக்கக் கூடாது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.மேலும், "வழக்கு விசாரணை, மூன்று மாதங்களுக்கு மேல் தாமதமானால், தீர்ப்பில், அதன் காரணம் தெரிவிக்கப்பட வேண்டும்' என்ற, 1987ல், டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு நகலையும், அனைத்து நீதிமன்றங்களுக்கும் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.