ஊட்டி: ஊட்டி, எச்.பி.எப்., தொழிலாளர்களின் தொடர் உண்ணாவிரதம், 29வது நாளாக தொடர்கிறது. "தொழிற்சாலை புனரமைப் புக்கு மத்திய நிதியமைச்சகம் முட்டுக்கட்டையாக உள்ளது' என, ஜனாதிபதிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
"ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை (எச்.பி.எப்.,) புனரமைக்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொழிலாளர்கள், கடந்த, 29வது நாளாக, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் கவனம், தொழிற்சாலை பக்கம் திரும்பவில்லை.
இந்நிலையில், தொழிற்சாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய, "எச்.பி.எப்., பாதுகாப்பு குழு' சார்பில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று அனுப்பிய மனு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மத்திய அரசின், ஒரே ஒரு பொது துறை நிறுவனம், எச்.பி.எப்., 1967ல், அப்போதைய பிரதமர் இந்திராவால் திறக்கப்பட்ட இந்நிறுவனம், நிர்வாக சீர்கேடு உட்பட பல காரணங்களால், நலிவடைந்துள்ளது. இத்தொழிற்சாலை மூடப்பட்டால், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும், எக்ஸ்ரே பிலிம் விலை, பன்மடங்கு உயரும். இத்தொழிற்சாலையை புனரமைக்க, மத்திய அரசின் பொருளாதார விவகார குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால், தொழிற்சாலை மீண்டும் புனரமைக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால், இந்த பரிந்துரையை மத்திய நிதியமைச்சகம் நிராகரித்ததால், தொழிற்சாலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், 1987ம் ஆண்டைய ஊதியத்தை தான், இதுவரை பெற்று வருகின்றனர். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. தொழிற்சாலை புனரமைப்பு நடவடிக்கைக்கு, பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.