Possible to raining at 2 days | இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Added : டிச 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: "தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் திண்டுக்கல், கன்னியாகுமரி,நெல்லை, மதுரை, நாகை, புதுச்சேரி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இடங்களில் பரலவமாக மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: நேற்று காலை நிலவர படி, தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு, இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், அனேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தெற்கு உள்மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை நகரின் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது தரை காற்று பலமாக வீசும்.
இவ்வாறு, அதிகாரி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை