சென்னை: திங்களூர் கைலாசநாதர் கோவில், வெளிப்பிரகாரத்தில் பதிக்கப்பட்ட கடப்பா கற்களை அகற்றி, கருங்கற்கள் பதிக்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள, திங்களூர் கைலாசநாதர் கோவில் புகழ்பெற்றது. தோஷங்கள் தீர்க்கும் நவகிரக கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவில், சந்திரன் ஸ்தலம் என, அழைக்கப்படுகிறது. இங்கு, பவுர்ணமியில், பல லட்சம் பக்தர்கள் வந்து செல்வர். இந்த கோவில் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி, கடப்பா கற்கள் பதிக்கப்பட்டன. இதனால், தோஷம் தீர்க்க வரும் பக்தர்கள், கடப்பா கல்லின், சூடு தாங்காமல் தவித்து வந்தனர். கோவில் பிரகாரங்களில், நவீன கற்கள் பதிப்பது ஆகம விதிகளுக்கு எதிராகும்.
இது குறித்து, "தினமலர்' நாழிதளில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அங்கு பதிக்கப்பட்ட கடப்பா கற்களை அகற்றி, கருங்கற்களை அமைக்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடப்பா கற்களை அகற்றும் பணி, இன்னும் இரண்டு மாதத்திற்குள் துவங்கும். அவற்றை அகற்றிய உடனே, கருங்கற்கள் பதிக்கப்படும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.