மும்பை: காரை வேகமாக ஓட்டி, ஒருவர் பலியான வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கான், இன்று ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்து, மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.மும்பையில் புறநகர் பகுதியான பந்த்ராவில், 2002 செப்டம்பர் 28ம் தேதி, பாலிவுட் நடிகர் சல்மான் கான், காரை வேகமாக ஓட்டிச் சென்று, நடைபாதையில் உறங்கி கொண்டு இருந்தவர்கள் மீது ஏற்றினார். இதில், ஒருவர் பலியானார்; நான்கு பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, மும்பை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், இன்று ஆஜராகும்படி, நடிகர் சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.இந்நிலையில், இன்று சல்மான் கான், 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக, கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி, அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
மும்பை போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சல்மான் கான் வேண்டுமென்றே, விசாரணையை தாமதப்படுத்துவதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், போலீசார், சாட்சிகளை விசாரணை செய்யவில்லை; தவறான சாட்சிகளை காட்டியுள்ளனர். நடிகருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று ஆஜராவதற்கு நடிகர் சல்மான் கானுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.