அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப் பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். துவக்கப்பள்ளிகளில், ஆசிரியர்கள், மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பு போன்ற, நீண்ட கால விடுப்பில் செல்லும் போது, அப்பணியிடங்களில், வேறு பள்ளிகளிலிருந்து, மாற்று ஆசிரியர்கள் வந்து, வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், இரு பள்ளிகளிலும் முழுமையாக வகுப்புகள் நடத்த முடியாமல், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. கடந்த, 1997க்கு முன், நீண்ட கால விடுப்பு பணியிடங்களில் பணியாற்ற, தற்காலிக ஆசிரியர்கள் இருந்தனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் வகுப்புகள் நடந்தன. தற்போதும், அதுபோன்று, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறையை, அரசு மேற்கொள்ள, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அரசு பள்ளிகளில் தற்போது, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்போதே, மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டால், விடுமுறை பணியிடங்களில், வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வசதியாக இருக்கும். இது குறித்து, பல பள்ளிகளின் மேலாண்மைக் குழுச் சிறப்புக் கூட்டங்களில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.