மதுரை: மதுரை மாவட்டத்தில் தொழில் துவங்க லைசென்ஸ் மற்றும் மின்இணைப்பை விரைந்து பெற்றுத்தர, கலெக்டர் தலைமையில் "ஒற்றைச் சாளர இடர் நீக்கக்குழு' அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவை உள்ளன. புதிய தொழில் நிறுவனங்களும், ஏற்கனவே நிறுவி, பின்பு விரிவாக்கப்படும் நிறுவனங்களும் நகரமைப்பு, சுகாதாரம், தீயணைப்பு, மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், தொழிற்சாலைகளின் ஆய்வாளர், மின் வாரியம், உள்ளாட்சி, வட்டாரவளர்ச்சி அலுவலகம் போன்ற துறைகளிடம் இருந்து லைசென்ஸ் பெற வேண்டும். இவற்றில் காலதாமதம், வீண் அலைச்சலை தவிர்க்க, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில், "ஒற்றைச்சாளர இடர்நீக்க குழு' அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் செயல்பாடு குறித்து குழுச் செயலரும், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளருமான மருதப்பன் கூறியதாவது:பல்வேறு துறைகளின் லைசென்ஸ்கள், மின் வசதி போன்றவற்றை, இடர்நீக்க குழு விரைந்து பெற்றுத்தரும். சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தொழில் முனைவோர் இத்துறைகளின் லைசன்ஸ் பெற, மாவட்ட தொழில் மையத்தில் ரூ.5 செலுத்தி, விண்ணப்பம் பெற வேண்டும். இதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும். விண்ணப்பத்தை, மாவட்ட தொழில் மையம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பும். இத்துறைகளின் லைசென்ஸ் பெற்ற பின், மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைந்து, இறுதி ஒப்புதல் வழங்க, உள்ளாட்சி அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பரிந்துரைக்கும். சம்பந்தப்பட்ட துறைகள் 30 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும். காலதாமதமாகும் விண்ணப்பங்களுக்கான காரணத்தை, ஒவ்வொரு மாதமும் நடக்கும் "ஓற்றைச்சாளர இடர்நீக்கக்குழு" கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.
இங்கு இடர்பாடுகளை நீக்கி, லைசென்ஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில், இதுவரை 8 தொழில் நிறுவனங்களுக்கு, இந்தாண்டு லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் இக்குழுவின் சேவைகளை பெற்று பயனடையலாம், என தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.