புதுடில்லி:டில்லியில் நேற்று நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழும கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் அல்லாத இதர கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பலரும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர். அவர்கள் பேசிய விவரம்:மம்தா பானர்ஜி (திரிணமுல் காங்.,) - மேற்கு வங்கம் : மேற்கு வங்க மாநிலம், மிக மோசமான நிதி நெருக்கடியில் உள்ளது. மாநிலத்தின், கடன், இரண்டு லட்சம் கோடியை தாண்டி விட்டது. இந்த விஷயத்தில், மத்திய அரசு உதவும் என, ஒன்றரை ஆண்டுகளாக, நாங்கள் காத்திருக்கிறோம்; ஆனாலும், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.இதனால், எங்கள் மாநில மக்கள் பொறுமை இழந்து விட்டனர்.
இன்று நான் பேசும் பேச்சாவது, மத்திய அரசின் இதயத்தை தொடும் என, நம்புகிறேன். எங்கள் மாநிலத்தில், இதற்கு முன், ஆட்சியில் இருந்த, கம்யூனிஸ்ட் அரசு, இந்த அளவுக்கு கடன் வாங்க, மத்திய அரசு எப்படி அனுமதித்தது என்று எனக்கு புரியவில்லை.நரேந்திர மோடி (பா.ஜ.,) - குஜராத்: சரியான கொள்கையை பின்பற்றாதது, அறிவு சார்ந்த எண்ணங்கள் இல்லாதது, நல்ல தலைமை இல்லாதது போன்ற காரணங்களால், மத்திய அரசு, தோல்வியின் விளிம்பில் உள்ளது. பொரு ளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதில், மன்மோகன் சிங் அரசு, அக்கறையோடு செயல்படவில்லை.ஒட்டு மொத்த உலகமே, இந்தியாவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் போது, நம் நாட்டிற்கு தலைமை வகிப்பவர்களோ, அவநம்பிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்; இந்த நிலையில், நல்ல பொருளாதார வளர்ச்சியை அடைவது கடினமே.
அர்ஜுன் முண்டா (பா.ஜ.,) - ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநித்தில் உள்ள, 24 மாவட்டங்களில், 19 மாவட்டங்கள், நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள் ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில், நிலவும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனில், மாநிலத்திற்கு, "பழங்குடியினர் மாநிலம்' என்ற, சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்.
மாநிலத்திற்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை வழங்கவில்லை எனில், நக்சல் பயங்கரவாதத்தை ஒழிப்பது கடினமே.ராமன் சிங் (பா.ஜ.,) - சத்தீஸ்கர்: மானியங்களை மக்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வழங்கும் முறை சரியானதல்ல. அதேபோல், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததும் தவறானது.முடிவுகள் எடுப்பதில், மத்திய அரசு செய்யும் காலதாமதம், முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதில் பின்பற்றப்படும் சிக்கலான நடைமுறைகளும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமின்றி, முதலீடு செய்ய முன் வருவோரையும் பாதித்துள்ளது.
கிரண்குமார் ரெட்டி (காங்.,) - ஆந்திரா: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழான வேலை நாட்களை, தற்போதுள்ள 150 நாட்கள் என்பதிலிருந்து, 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். அப்போது, விவசாயம் சாராத தொழிலாளர்களும், சமூகத்தின் நலிந்த பிரிவினரும் பலன் அடைவர்.
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததும், இதற்கு பார்லிமென்டின் ஒப்புதல் பெற்றதும் சிறப்பானது. இதன் மூலம், விவசாய உற்பத்தியில், புதிய தொழில்நுட்பம் புகுவதோடு, முதலீடுகளும் அதிகரிக்கும்.நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்) - பீகார்: பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு, அக்கறையோடு பரிசீலிக்கவில்லை.
எனவே, இந்த விஷயத்தில், மத்திய அரசு விரைவாக முடிவெடுத்து, பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.மாநிலங்களில், மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு, 90 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான பணிக்கும், குறைந்தபட்ச கூலியை, மாநில அரசுகள் நிர்ணயித்துள்ளன. அந்தக் கூலியை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றுவோருக்கும் வழங்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.