சென்னை: "கருவில் வளரும் குழந்தைக்கு தந்தை என்பதை ஒப்புக் கொள்ளும் பிரசன்னா, "உன்னுடன் வாழ முடியாது; குழந்தையை பெற்றுக் கொடுத்து விட்டு ஓடி விடு' என்கிறார்' என, திருமண மோசடி பெண் சஹானா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் சஹானா, 28. இவர்,போரூர் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு வாலிபர்களை, செக்ஸ் வலையில் வீழ்த்தி, திருமண மோசடியில் ஈடுபட்டார் என, புகார் எழுந்தது. இது குறித்து,போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாலிபர்களிடம், 1. 20 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக, சஹானாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளி வந்துள்ள அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதன் விபரம்: வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த போது, புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது. ஆதரவின்றி சிக்கித் தவித்த போது, "கடைசி வரை உன்னை கண் கலங்காமல் காப்பாற்றுவேன்' என, உறுதியளித்தார். அதை நம்பி, அவரது தங்கை திருமணத்திற்கு, 5 சவரன் மற்றும், 1.35 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தை வாங்கியர் சில மாதங்கள் கழித்து, எங்கு போனார் என்றே தெரியவில்லை. அவர் வீடு உள்பட அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்து, நொந்து விட்டேன். மிகுந்த மன உளைச்சலில் இருந்த போது, ஆறுதலாக,போரூர் மணிகண்டனின் நட்பு கிடைத்தது. அதுவும் காதலாக மாற, அவருடன் மாலை மட்டும் மாற்றிக் கொண்டேன். தனிமையில் தவிக்க விட்டு, அவரும் பிரிந்து சென்று விட்டார். இந்த சூழ்நிலையில், நிர்கதியாக நின்ற போது, மீண்டும் பிரசன்னா, என்னை சந்தித்தார். நடந்ததை சொன்னேன். "கற்பு என்பது உடலில் அல்ல; மனதில் இருக்கிறது' எனக் கூறி, பெற்றோர் சம்மதத்துடன், காஞ்சிபுரம் ஊத்துக்காட்டு அம்மன் கோவிலில், உறவினர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார். இல்லாற வாழ்வு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதனால், நான் கர்ப்பமுற்றேன்.
இந்த நிலையில், எனக்கு அறிமுகமே இல்லாத ஒருவர், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை வைத்து, போலீசார் என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறைக்கு சென்ற போது, மாற்று உடை, பிஸ்கட், பிரஸ், பேஸ்ட் வாங்கி கொடுத்து, "உன் கருவில் என் குழந்தை வளர்கிறது; நல்லபடியாக பார்த்துக் கொள், எதற்கும் கவலைப்படாதே, நான் இருக்கிறேன்' என, பிரசன்னா ஆறுதல் தெரிவித்து, வழியனுப்பினார். அதற்கு பிறகு, ஒரு நாள் கூட, சிறைக்கு வந்து பார்க்கவில்லை. மேலும், அவர் கொடுத்த புகாரை வைத்து, பிடிவாரண்ட் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
என் கருவில் வளரும் குழந்தைக்கு தந்தை என்பதை ஒப்புக் கொள்ளும் பிரசன்னா, என்னுடன் வாழ முடியாது என்கிறார். அவரை பிரிந்து ஒரு நொடி கூட, என்னால் இருக்க முடியாது. இவ்வாறு புகாரில் சஹானா தெரிவித்துள்ளார்.
சஹா அளித்த பேட்டி: செக்ஸ் வெறிக்கு, பல வாலிபர்களை பலிகடா ஆக்கினேன் என்பது, என்மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை, என் கணவர் பிரசன்னா நன்கு அறிவார். சூழ்நிலை கைதியாக மாறியதால், குழந்தைக்கு தந்தை என்பதை ஒப்புக் கொள்ளும் அவர், என்ன ஏற்க மறுக்கிறார். கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அப்படி என் உயிர் போனால், அவர் மடியில் போகட்டுமே; அதற்காக, பிரசன்னாவின் வீடு முன் போராட்டம் நடத்தப் போகிறேன். இவ்வாறு சஹானா தெரிவித்தார்.