சபரிமலை:சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல உற்சவ காலத்தில், 110 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது; இது கடந்த ஆண்டை விட, 4 கோடி ரூபாய் குறைவு.சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவம்பர், 16ம் தேதி துவங்கிய மண்டல உற்சவம், மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது.
இந்த மண்டல உற்சவத்தின் போது, நாடு முழுவதிலும் இருந்து வந்த, லட்சக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்த பின், உண்டியலில் செலுத்திய காணிக்கை மற்றும் அப்பம், அரவணை பிரசாதம் விற்பனை மூலம், கோவிலுக்கு, 110 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.உண்டியல் காணிக்கை மூலம், 40 கோடி ரூபாயும், அப்பம் மற்றும் அரவணை விற்பனை மூலம், 53 கோடி ரூபாயும், அர்ச்சனை சீட்டு உட்பட, இதர வழிகளில், 17 கோடி ரூபாயும் வசூலாகிஉள்ளது.இத்தகவலை, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர், எம்.பி.கோவிந்தன் நாயர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.