மதுரை: மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 2வது தெருவில் திருப்பதி மாவுமில்லில், ரேஷன் பச்சரிசியை மாவாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி மாவு மில் உரிமையாளர் திருப்பதி. இவரது மில்லில், ரேஷன் பச்சரிசி கடத்தப்பட்டு, மாவாக அரைத்து, வெளியிடங்களுக்கு விற்கப்பட்டு வந்தது. இதுகுறித்து, தகவல் அறித்த உணவுப்பொருள் கடத்தல் பிரிவு எஸ்.பி., சாமிநாதன், டி.எஸ்.பி., ராஜன் ராய், பறக்கும் படை தாசில்தார் மகாலிங்கம் தலைமையில், குழுவினர் மாவு மில்லை சோதனையிட்டனர். அங்கு ரேஷன் அரிசியும், மாவாக்கப்பட்ட மூடைகளும் கிடந்தன.
இதுகுறித்து, டி.எஸ்.பி., கூறியதாவது: உரிமையாளர் திருப்பதி, லாரி டிரைவர் முத்து சரவணன், கிளீனர் தங்கராஜை கைது செய்துள்ளோம். மில்லில் 50 மூடை பச்சரிசி, 212 மூடை மாவு இருந்தது.ஒவ்வொன்றும் 50 கிலோ எடை கொண்டது. தொடர் விசாரணை நடக்கிறது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.