திருச்சி: கோவில் பாதுகாப்புப் பணிக்கு சென்ற இடத்தில், இன்ஸ்பெக்டருடன் உல்லாசமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, பெண் எஸ்.ஐ., பணிமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சகாய அன்பரசு, 46. அதே ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றுபவர் அம்பிகா, 29. கடந்தாண்டு எஸ்.ஐ., பயிற்சி மேற்கொண்ட அம்பிகா, சில மாதத்துக்கு முன் தான், மண்ணச்சநல்லூர் எஸ்.ஐ.,யாக பொறுப்பேற்றுக்கொண்டார். திருமணமாகாத அம்பிகா, கடந்த, 23ம் தேதி, மண்ணச்சநல்லூரை அடுத்த புலிவலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, பகளவாடியில் உள்ள மண்டுக்கருப்பச்சாமி கோவில் பாதுகாப்புப்பணிக்காக சென்றார். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் இருந்த, இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு அங்கு வந்தார். இருவரும் அன்றிரவு, பகளவாடியில் உள்ள, ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரி கெஸ்ட் ஹவுஸில் தங்கினர். இதையடுத்து, இருவரும் கெஸ்ட் ஹவுஸில் உல்லாசமாக இருந்ததாக ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், ஜீயபுரம் டி.எஸ்.பி., அழகேசனுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற டி.எஸ்.பி., அழகேசன், ஊர் முக்கியஸ்தர்கள், கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ.,யும், கெஸ்ட் ஹவுஸில் மூன்று மணி நேரம் தனியாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கையை எஸ்.பி., லலிதாலட்சுமியிடம், டி.எஸ்.பி., அழகேசன் வழங்கினார். எஸ்.ஐ., அம்பிகாவை, வளநாடு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, எஸ்.பி., லலிதா லட்சுமி உத்தரவிட்டுள்ளார். விரைவில் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு மீது கடும் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.